×

பிரபல நிறுவனம் இழுத்து மூடல்! வெளிநாடுகளில் பரிதவிக்கும் இரண்டு லட்சம் பேர் !

உள்ளங்கைகளில் உலகம் என்று விஞ்ஞானம் பரந்து விரிந்திருக்கும் பிரபஞ்சத்தை சுருக்கி விட்ட பிறகு பொருளாதார பிரச்சனையில் பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் கூட ஆட்டம் கண்டுள்ளன. உலகின் பழமையான நிறுவனங்களில் தலையாயது என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவித்தது உலகம் முழுவதுமே பொருளாதார நிபுணர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உள்ளங்கைகளில் உலகம் என்று விஞ்ஞானம் பரந்து விரிந்திருக்கும் பிரபஞ்சத்தை சுருக்கி விட்ட பிறகு பொருளாதார பிரச்சனையில் பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் கூட
 

உள்ளங்கைகளில் உலகம் என்று விஞ்ஞானம் பரந்து விரிந்திருக்கும் பிரபஞ்சத்தை சுருக்கி விட்ட பிறகு பொருளாதார பிரச்சனையில் பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் கூட ஆட்டம் கண்டுள்ளன. உலகின் பழமையான நிறுவனங்களில் தலையாயது என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவித்தது உலகம் முழுவதுமே பொருளாதார நிபுணர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

உள்ளங்கைகளில் உலகம் என்று விஞ்ஞானம் பரந்து விரிந்திருக்கும் பிரபஞ்சத்தை சுருக்கி விட்ட பிறகு பொருளாதார பிரச்சனையில் பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் கூட ஆட்டம் கண்டுள்ளன. உலகின் பழமையான நிறுவனங்களில் தலையாயது என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவித்தது உலகம் முழுவதுமே பொருளாதார நிபுணர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  1841 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தாமஸ் குக் நிறுவனத்தில், 21 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக உலகம் முழுவதும் 16 நாடுகளில் உணவகங்கள், விடுதிகள் சொந்தமாக உள்ளன.

கடந்த ஓராண்டில் மட்டும் தாமஸ் குக் நிறுவனம் சராசரியாக ஒரு கோடியே 90 லட்சம் வாடிக்கையாளர்களை, விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றிருக்கிறது. நேர்த்தியான சேவை என்று வாடிக்கையாளர்களிடையே பன்னெடுங்காலமாக பெருமையைப் பெற்ற தாமஸ் குக் நிறுவனம், பிற நிறுவனங்களைப் போலவே கடனில் சிக்கித் தவித்து வந்தது. அந்நிறுவனத்தின் கடன் சுமை ஒரு கட்டத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கவே, கடன் கொடுத்தவர்களிடம் இருந்து நெருக்கடியும் அதிகரித்தது.  இந்நிலையில், அதன் பங்குதாரரான சீனாவின் போஷன் நிறுவனத்தை தாமஸ் குக் நாடியது. சுமார் 8,000 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க அந்த நிறுவனமும் ஒப்புக் கொண்டது. ஆனால் கடைசி நேரத்தில் மேலும் ஆயிரத்து 700 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கடன் கொடுத்த நிறுவனங்கள் வற்புறுத்தவே, வேறு வழியின்றி தவித்த தாமஸ் குக் நிறுவனம், தங்களது லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்து திவாலானதாக அறிவித்தது. இந்நிலையில், தாமஸ் குக் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்த 21 ஆயிரம் ஊழியர்களின் வேலை வாய்ப்பு பறிபோனது.

மேலும், தாமஸ் குக் மூலமாக சுற்றுலா பயணிகளாக வெளிநாடுகளுக்கு சென்றிருக்கும் இரண்டு லட்சம் பேர் வெவ்வேறு நாடுகளில் என்ன செய்வது எனத் தெரியாமல் பரிதவித்து வருகிறார்கள்.  அவர்களை, மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கையில் பிரிட்டன் அரசு இறங்கியுள்ளது.