×

பாரீஸ் நோட்ரா-டாம் தேவாலய தீ விபத்து; புனரமைப்புக்கு ரூ.1975 கோடி தரும் பிரபல நடிகையின் கோடீஸ்வர கணவர்!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள உலகப்புகழ் பெற்ற நோட்ரா-டாம் தேவாலயம் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. புகழ்பெற்ற ஐரோப்பிய கோதிக் கட்டிடக்கலை (Gothic architecture) பாணியில் கட்டப்பட்ட இந்த தேவாலயமே, நகரின் முதன்மை தேவாலயம் ஆகும் பாரீஸ்: பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரீஸில் உள்ள உலகப்புகழ் பெற்ற பழமையான நோட்ரா-டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து நீண்ட போராட்டத்துக்கு பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள உலகப்புகழ் பெற்ற நோட்ரா-டாம் தேவாலயம் 12-ஆம் நூற்றாண்டில்
 

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள உலகப்புகழ் பெற்ற நோட்ரா-டாம் தேவாலயம் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. புகழ்பெற்ற ஐரோப்பிய கோதிக் கட்டிடக்கலை (Gothic architecture) பாணியில் கட்டப்பட்ட இந்த தேவாலயமே, நகரின் முதன்மை தேவாலயம் ஆகும்

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரீஸில் உள்ள உலகப்புகழ் பெற்ற பழமையான நோட்ரா-டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து நீண்ட போராட்டத்துக்கு பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள உலகப்புகழ் பெற்ற நோட்ரா-டாம் தேவாலயம் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. புகழ்பெற்ற ஐரோப்பிய கோதிக் கட்டிடக்கலை (Gothic architecture) பாணியில் கட்டப்பட்ட இந்த தேவாலயமே, நகரின் முதன்மை தேவாலயம் ஆகும்.

ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாகவும், பிரான்சின் வரலாற்றுச் சின்னமாகவும் திகழ்ந்து வரும் இந்த தேவாலயத்திற்கு, ஆண்டொன்றுக்கு மதபேதமின்றி சுமார் ஒரு கோடிக்கும் மேலான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இதன் அழகையும், பழமையையும் ரசித்து செல்வதாக புள்ளி விவரங்கள் கூறும் இந்த 800 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், அந்நாட்டு நேரப்படி நேற்று மாலையில் நோட்ரா-டாம் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டது. முதலில் மேற்கூரையில் ஏற்பட்ட தீ, கொஞ்சம், கொஞ்சமாக தேவாலயம் முழுவதும் பரவியது. பின்னர் அருகில் இருந்த கோபுரத்தில் தீப்பற்றியது. மரச் சாமான்கள் மற்றும் ஈயத்தால் செய்யப்பட்டது என்பதால் தீ மளமளவென எரிந்து அந்தக் கோபுரம் சரிந்து விழுந்தது.

இந்த தீ விபத்தை கண்டு சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். தீயினால் ஏற்பட்ட புகைமண்டலத்தை பாரீஸ் நகரம் முழுவதும் இருந்து பார்க்க முடிந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் கண்ணீர் விட்டு அழுதனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சுமார் 400 தீயணைப்பு வீரர்கள் 12 மணி நேர கடும் போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விலைமதிப்பில்லாத நினைவுச் சின்னங்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பராமரிப்பு பணியின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல் வெளியானதும், சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயணைப்பு நடவடிக்கைகளை நேரடியாக கவனித்த அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான், தேவாலயம் மீண்டும் கட்டமைக்கப்படும் என்று உறுதி தெரிவித்ததுடன், இதற்காக உலகம் முழுவதும் நிதி திரட்டப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தேவாலய புனரமைப்பு பணிக்காக 100 மில்லியன் யூரோக்கள், அதாவது இந்திய மதிப்புப்படி, சுமார் ரூ.1975 கோடி வழங்கவுள்ளதாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கோடீஸ்வரரும், பிரபல ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக்கின்  கணவருமான பிராங்கோயிஸ் ஹென்றி பினோல்ட் அறிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க

அழகும், சரித்திரமும் கூறும் பிரான்ஸ்!!