×

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான், வங்கதேச அகதிகளுக்கு குடியுரிமை – புதிய பிரதமர் இம்ரான்கான் அதிரடி உத்தரவு

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என புதிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என புதிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து பல ஆயிரம் அகதிகள் பக்கத்து நாடுகளுக்கு இடம் பெயர்கின்றனர். தீவிரவாதம், உள்நாட்டு போர் போன்ற பல்வேறு காரணங்களால் அவர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி அகதிகளாக மற்ற நாடுகளில் குடியேறுகின்றனர்.
 

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என புதிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என புதிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து பல ஆயிரம் அகதிகள் பக்கத்து நாடுகளுக்கு இடம் பெயர்கின்றனர். தீவிரவாதம், உள்நாட்டு போர் போன்ற பல்வேறு காரணங்களால் அவர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி அகதிகளாக மற்ற நாடுகளில் குடியேறுகின்றனர்.

ஆனால் இவ்வாறு அகதிகளாக குடியேறிய மக்களுக்கு எந்த நாட்டிலும் குடியுரிமை மற்றும் எவ்வித உரிமைகளும் வழங்கப்படுவது இல்லை. இதனால் அவர்கள் அன்றாட வாழ்வுக்கே மிகவும் போராடும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையை ஒழிக்கும் முயற்சியில் தற்போது பாகிஸ்தான் அரசு களமிறங்கியுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச அகதிகளுக்கு குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமர் இம்ரான் கான், அகதிகள் எவ்வித அடையாளங்களும் இல்லாததால் வேலை வாய்ப்புகள் இன்றி மிகவும் சிரமப்படுவதாகவும், அதனால் நடைபெறும் பல்வேறு குற்றங்களை தடுக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் 2.7 மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.