×

பயணிகளை சிரிக்கவைக்க பணிப்பெண் செய்த காரியம்!

பயணிகளை சிரிப்பு மூட்டுவதற்காக அவ்வாறு விமான நிறுவனம் ஏற்பாடு செய்திருந்ததும் தெரியவர, அவர்கள் எல்லாரும் எதிர்பார்த்தபடியே பயணிகளுக்கு சிரிப்போ சிரிப்பு. ஒருவருக்கு மட்டும் கடுப்போ கடுப்பு. அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் நேஷ்வில்லில் இருந்து பிலடெல்பியாவுக்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பறக்க தயாராக இருந்தது. பயணிகள் ஒவ்வொருவராக அவரவர் இருக்கையில் வந்து அமர்கின்றனர். தனது சூட்கேசை வைப்பதற்காக தலைக்குமேல் இருக்கும் பெட்டி வைக்கும் கேபினை திறக்கிறார். உள்ளே, சூட்கேஸ் வைக்கும் இடத்தில் யாரோ ஒரு பெண் படுத்திருப்பதைக்
 

பயணிகளை சிரிப்பு மூட்டுவதற்காக அவ்வாறு விமான நிறுவனம் ஏற்பாடு செய்திருந்ததும் தெரியவர, அவர்கள் எல்லாரும் எதிர்பார்த்தபடியே பயணிகளுக்கு சிரிப்போ சிரிப்பு. ஒருவருக்கு மட்டும் கடுப்போ கடுப்பு.

அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் நேஷ்வில்லில் இருந்து பிலடெல்பியாவுக்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பறக்க தயாராக இருந்தது. பயணிகள் ஒவ்வொருவராக அவரவர் இருக்கையில் வந்து அமர்கின்றனர். தனது சூட்கேசை வைப்பதற்காக தலைக்குமேல் இருக்கும் பெட்டி வைக்கும் கேபினை திறக்கிறார். உள்ளே, சூட்கேஸ் வைக்கும் இடத்தில் யாரோ ஒரு பெண் படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, யாரோ டிக்கெட் வாங்காமல் திருட்டுத்தனமாக விமானத்திற்குள் நுழைந்து அங்கே ஒளிந்திருப்பதாக நினைத்து அவரை கீழே இறங்கச் சொல்கிறார். அந்தப்பெண்ணோ கீழே வரமாட்டேன் என அடம்பிடிக்கிறார்.

பத்து நிமிடங்களுக்கு இந்த அடம் நீடிக்கிறது, அதன்பின் அந்தப்பெண் கீழே இறங்குகிறார். அதன்பின் பார்த்தால், அவ்விமானத்தின் பணிபெண்களில் அவர் ஒருவர் என்பதும், பயணிகளை சிரிப்பு மூட்டுவதற்காக அவ்வாறு விமான நிறுவனம் ஏற்பாடு செய்திருந்ததும் தெரியவர, அவர்கள் எல்லாரும் எதிர்பார்த்தபடியே பயணிகளுக்கு சிரிப்போ சிரிப்பு.  ஒருவருக்கு மட்டும் கடுப்போ கடுப்பு. விமானம் பிலடெல்பியாவில் தரையிறங்கியதும் நேராக விமான நிறுவனத்தின் கவுண்ட்டருக்குச் சென்று பாதுகாப்பு குறைப்படு என சத்தம் போட்டுவிட்டு சென்றார். இந்த நிகழ்வை நீங்க காமெடியா பார்க்குறீங்களா, இல்லை பாதுகாப்பு குறைப்பாடாகவா?