×

பத்திரிகை தொழிலுக்கு குட்பை சொன்ன உலக கோடீஸ்வரர் வாரன் பஃபெட்!

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரர்களுள் ஒருவரான வாரன் பஃபெட் தான் நடத்திவந்த பத்திரிகை நிறுவனத்தை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரர்களுள் ஒருவரான வாரன் பஃபெட் தான் நடத்திவந்த பத்திரிகை நிறுவனத்தை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் நான்காவது பெரிய பணக்காரராக உள்ளவர் வாரன் பஃபெட். இவரது சொத்து மதிப்பு 88.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இவர் பெர்க்ஷியர் ஹாத்வே என்ற நிறுவனத்தின் மூலம் பல தொழில்களை
 

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரர்களுள் ஒருவரான வாரன் பஃபெட் தான் நடத்திவந்த பத்திரிகை நிறுவனத்தை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரர்களுள் ஒருவரான வாரன் பஃபெட் தான் நடத்திவந்த பத்திரிகை நிறுவனத்தை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் நான்காவது பெரிய பணக்காரராக உள்ளவர் வாரன் பஃபெட். இவரது சொத்து மதிப்பு 88.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இவர் பெர்க்‌ஷியர் ஹாத்வே என்ற நிறுவனத்தின் மூலம் பல தொழில்களை செய்து வருகிறார். இவர் தன்னுடைய இளமைப் பருவத்தில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையை டெலிவரி செய்யும் டெலிவரி பாயாகத் தொடங்கினார். இதனால், தன்னை பத்திரிகையாளனாகக் காட்டிக்கொள்ள பெரிதும் விரும்பினார். பி.எச் மீடியா என்ற நிறுவனத்தை ஆரம்பித்து பல நாளிதழ்களை நடத்தி வருகிறார். இதன் மூலம் தான் திருப்தி காண்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சமீப காலமாக ஆன்லைனில் செய்திகள் படிப்பது பரிமாறுவது அதிகரித்து வருவதால் பிரிண்ட் மீடியாக்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதனால், தன்னுடைய பத்திரிகை நிறுவனத்தை விற்பனை செய்ய வாரன் பஃபெட் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தன்னுடைய பி.எச் மீடியாவை லீ என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்துக்கு 140 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. விற்பனை மற்றும் கையகப்படுத்தும் பணிகள் அனைத்தும் மார்ச் மாதம் இறுதிக்குள் முடியும் என்றும் கூறப்படுகிறது.
டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் வளர்ச்சி காரணமாக மிகப்பெரிய மீடியா ஜாம்பவான் தன்னுடைய நிறுவனத்தை விற்றிருப்பது பத்திரிகையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.