×

பதட்டம் அடங்குவதற்குள் இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: கலக்கத்தில் மக்கள்!

இலங்கை தலைநகர் கொழும்புவில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வெடிகுண்டு தாக்குதலில் 359 பேர் பலி இலங்கையின் பல்வேறு இடங்களில் கடந்த ஞாயிற்று கிழமை ஈஸ்டர் தினத்தன்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தலைநகர் கொழும்புவில் உள்ள, ஷாங்கரி லா நட்சத்திர விடுதி, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி மற்றும்
 

இலங்கை தலைநகர் கொழும்புவில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

வெடிகுண்டு  தாக்குதலில் 359 பேர் பலி 

 

இலங்கையின் பல்வேறு இடங்களில் கடந்த ஞாயிற்று கிழமை ஈஸ்டர் தினத்தன்று  அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தலைநகர் கொழும்புவில் உள்ள, ஷாங்கரி லா நட்சத்திர விடுதி, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி மற்றும் சின்னமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும்  வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதலில் 359 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

பொறுப்பேற்ற ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பு

 

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டவர்களின் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனிடையே, இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியது 9 பேர் எனவும், அதில் ஒருவர் பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதற்காக அரசு மன்னிப்பு கோரியது.

சிறிசேன அறிவிப்பு 

 

மேலும் இலங்கையின் முப்படை தளபதிகளை மாற்றப் போவதாக அறிவித்த சிறிசேன இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ மற்றும் காவல்துறை தலைவர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோரை ராஜினாமா செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் குண்டுவெடிப்பு

இந்நிலையில்  இலங்கை தலைநகர் கொழும்பு அருகே புகோடா நகரில் மீண்டும் குண்டுவெடிப்பு  சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதை அந்நாட்டுச் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் உறுதி செய்துள்ளது. புகோடா நகரில் நீதிமன்ற வளாகம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாகத் தகவல்  வெளியாகியுள்ளது. ஆனால்  இதில் எந்தவித உயிர்பலியும்  ஏற்பட்டதா என்பதை அறிய போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு விரைந்துள்ளனர் .

தேவாலயங்களைக் குறிவைத்துத் தாக்கப்பட்ட இந்த தாக்குதலில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது இலங்கையில் தொடர்ந்து பதட்டமான சூழலை உருவாக்கியுள்ளது. 

இதையும் வாசிக்க: இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி; இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை!