×

பணக்காரர் பட்டியலில் மீண்டும் பில்கேட்ஸ் முதலிடம் ! 2வது இடத்துக்கு சென்றார் அமேசான் நிறுவனர்.

உலகத்தின் முதல் பணக்காரர் என்ற பெயரை மீண்டும் தக்கவைத்துள்ளார் பில்கேட்ஸ். இதன் மூலம் முதலிடத்தில் இருநத அமேசான் நிறுவனர் பின்னுக்கு தள்ளப்பட்டார். அமேசானின் நிறுவனர் ஜெப் பிஜோஸ், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை இழந்துள்ளார். ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை அறிக்கையில் அதனுடைய வருவாய் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பங்குகள் முதலீட்டில் ரூ.49,619 கோடி இழந்துள்ளார். உலகத்தின் முதல் பணக்காரர் என்ற பெயரை மீண்டும் தக்கவைத்துள்ளார் பில்கேட்ஸ். இதன் மூலம்
 

உலகத்தின் முதல் பணக்காரர் என்ற பெயரை மீண்டும் தக்கவைத்துள்ளார் பில்கேட்ஸ். இதன் மூலம் முதலிடத்தில் இருநத அமேசான் நிறுவனர் பின்னுக்கு தள்ளப்பட்டார்.

 அமேசானின் நிறுவனர் ஜெப் பிஜோஸ், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை இழந்துள்ளார். ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை அறிக்கையில் அதனுடைய வருவாய் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பங்குகள் முதலீட்டில் ரூ.49,619 கோடி  இழந்துள்ளார்.

உலகத்தின் முதல் பணக்காரர் என்ற பெயரை மீண்டும் தக்கவைத்துள்ளார் பில்கேட்ஸ். இதன் மூலம் முதலிடத்தில் இருநத அமேசான் நிறுவனர் பின்னுக்கு தள்ளப்பட்டார்.

 

அமேசானின் நிறுவனர் ஜெப் பிஜோஸ், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை இழந்துள்ளார். ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை அறிக்கையில் அதனுடைய வருவாய் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பங்குகள் முதலீட்டில் ரூ.49,619 கோடி  இழந்துள்ளார். இதனால் அதன் நிறுவனர் ஜெப் பிஜோஸின் சொத்து மதிப்பு ரூ.7,36,500 கோடியாக குறைந்தது.  அதே சமயம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.7,49,370 கோடியாக உயர்ந்துள்ளது.

பில் கேட்ஸின் தற்போதைய சொத்து மதிப்பு 105.7 பில்லியன் டாலர். பில்கேட்ஸ் 24 ஆண்டுகளாக தக்கவைத்திருந்த பெரிய பணக்காரர் என்ற பட்டம் 2018ல் அமேசான் நிறுவனர் ஜெப் பிஜோஸ் கைவசம் சென்றது. அப்போது அவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.11,34,000 கோடி. நடப்பு நிதியாண்டில் அமேசான் நிறுவனத்தின் நிகர வருவாய் 26 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. பில் கேட்ஸ் 1987ல் போபர்ஸின் பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றார். அப்போது சொத்து மதிப்பு 1.25 பில்லியன் டாலர். அதேபோல், போபர்ஸின்  அமெரிக்க பணக்காரர்  பட்டியலில்  கடந்த 1998ல் இடம் பெற்றார் ஜெப் பிஜோஸ். அப்போது அவரது சொத்து மதிப்பு 1.6 பில்லியன் டாலர். ஏப்ரல் மாதம் தனது மனைவியை விவாகரத்து செய்த பிறகு ரூ.2,55,000 கோடி மதிப்புள்ள பங்குகளை ஜீவனாம்சமாக மனைவி மாக்கென்ஸி பிஜோஸிக்கு வழங்கியுள்ளார் ஜெப் பிஜோஸ். உலகத்திலேயே இவ்வளவு பெரிய தொகையை ஜீவனாம்சமாக பெறும் பெண்மணி இவராகத்தான் இருக்கும்.