×

பகுதி நேரமாக மருத்துவராக பணியாற்றும் பிரதமர்!

பூடான் நாட்டின் பிரதமர் வார இறுதி நாட்களில் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. பூடான் நாட்டின் பிரதமர் வார இறுதி நாட்களில் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் பூடான் நாட்டின் புதிய பிரதமராக லூட்டே ஷேரிங் பதவியேற்றார். இவர் சனிக்கிழமைகளில் ஜிக்மி டோர்ஜி வாங்ஜுக் தேசிய மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிவருகிறார். வாரத்தில் 5 நாட்கள் மக்களுக்காக பிரதமராக பணியாற்றும் இவர் சனிக்கிழமைகளில் நோயாளிகளுக்காகவும், ஞாயிற்றுக்கிழமையை குடும்ப உறுப்பினர்களுடனும்
 

பூடான் நாட்டின் பிரதமர் வார இறுதி நாட்களில் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. 

பூடான் நாட்டின் பிரதமர் வார இறுதி நாட்களில் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. 

கடந்த நவம்பர் மாதம் பூடான் நாட்டின் புதிய பிரதமராக லூட்டே ஷேரிங் பதவியேற்றார். இவர் சனிக்கிழமைகளில் ஜிக்மி டோர்ஜி வாங்ஜுக் தேசிய மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிவருகிறார். வாரத்தில் 5 நாட்கள் மக்களுக்காக பிரதமராக பணியாற்றும் இவர் சனிக்கிழமைகளில் நோயாளிகளுக்காகவும், ஞாயிற்றுக்கிழமையை குடும்ப உறுப்பினர்களுடனும் செலவழிக்கிறார். 

இதுகுறித்து மருத்துவரும், பிரதமருமான லூட்டே கூறுகையில், “சிலர் மன அழுத்தத்தை குறைக்க கோல்ஃப் விளையாடுகின்றனர். இன்னும் சிலர் வில்வித்தை செய்கிறார். ஆனால் நான் மருத்துவராக மக்களுக்கு சேவை செய்கிறேன். இன்னும் சொல்லப்போனால் எனக்கு பிரதமர் பதவியை விட மருத்துவர் பணியே மிகவும் பிடித்துள்ளது. என் வாழ்நாள் முழுவதும் இதனை செய்ய விரும்பிகிறேன்” எனக் கூறினார். 

இதுவரை லூட்டே பல சிறுநீரக நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், பல நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.