×

நான் வாழவா? சாகவா? இன்ஸ்டாகிராமில் வாக்கெடுப்பு நடத்திய சிறுமி!!

கோலாலம்பூரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் நான் உயிர்வாழலாமா வேண்டாமா என்று இன்ஸ்டாகிராமில் வாக்கெடுப்பு நடத்தித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பதைபதைக்க வைக்கிறது. கோலாலம்பூரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் நான் உயிர்வாழலாமா வேண்டாமா என்று இன்ஸ்டாகிராமில் வாக்கெடுப்பு நடத்தித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பதைபதைக்க வைக்கிறது. இன்றைய இளம் சமூகத்தினரை குறித்துவைத்து சமூக வலைதள தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது. அது என்ன சமூக வலைதள தாக்குதல் என்றால், சமூக வலைதளத்தில் நேரலை செய்து கொண்டே
 

கோலாலம்பூரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் நான் உயிர்வாழலாமா வேண்டாமா என்று இன்ஸ்டாகிராமில் வாக்கெடுப்பு நடத்தித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பதைபதைக்க வைக்கிறது. 

கோலாலம்பூரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் நான் உயிர்வாழலாமா வேண்டாமா என்று இன்ஸ்டாகிராமில் வாக்கெடுப்பு நடத்தித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பதைபதைக்க வைக்கிறது. 

இன்றைய இளம் சமூகத்தினரை குறித்துவைத்து சமூக வலைதள தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது. அது என்ன சமூக வலைதள தாக்குதல் என்றால், சமூக வலைதளத்தில் நேரலை செய்து கொண்டே தற்கொலை செய்து கொள்வது, சமூகவலைதளத்தில் காதலிப்பது, தனது சுக துக்கங்களை சமூக வலைதளவாசிகளிடம் பகிர்ந்து கொள்வது என எல்லாவற்றையுமே சமூகவலைதளத்துடன் ஒன்றிணைத்து கொண்டுள்ளன இன்றைய இளசுகள். இதனால் ஏற்படும் பாதிப்பு சமூகத்திற்கோ வலைதளத்திற்கோ இல்லை.. தனிப்பட்ட நபருக்கு தான்….

மலேசியாவின் கோலாலம்பூரை சேர்ந்த 16 வயது பெண் ஒருவர், கடந்த திங்கட்கிழமை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இறப்பு செய்தியை பதிவிட்டுள்ளார். அதற்கு சுமார் 69% பேர் மரணத்தைக் குறிக்கும் “D” என்ற எழுத்தைக் குறிப்பிட்டுப் பதிவுசெய்திருந்தனர். மீதம் 31% சதவீதம் பேர் இந்த விபரீத முடிவு வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளனர்.

இதன் விளைவு, அந்த பெண் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த செய்தியை மற்றொருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டது மலேசிய நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெண்ணை இறக்க சொன்ன அந்த 69%  பேரும் தற்கொலை செய்ய தூண்டியவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். ஆனால் அத்தகைய சமூக வலைதளவாசிகளின் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது. 

தற்போது தற்கொலை செய்துகொள்ளலாம் எனக் கருத்துத் தெரிவித்தவர்கள் ஆழ்ந்த வருத்தத்தில் இருப்பதாகவும், தாங்கள் செய்த தவறை எண்ணி வருந்துவதாகவும் இறந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளனர். சமூகத்தில் மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் பெண்ணின் தற்கொலைக்கு ஒரு காரணம் என மன நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.