×

நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் சிம்பன்ஸிகள்!   85 கோடிக்கு விலைப்போன ஓவியம்!! 

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதில் சிம்பன்ஸிகள் அமர்ந்திருப்பது போன்ற ஓவியம் ரூ. 85 கோடிக்கு ஏலமிடப்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதில் சிம்பன்ஸிகள் அமர்ந்திருப்பது போன்ற ஓவியம் ரூ. 85 கோடிக்கு ஏலமிடப்பட்டுள்ளது. லண்டனில் தெருவோர ஓவியரான பேங்க்சி என்பவர் வரையப்பட்ட இந்த ஓவியம் பிரிட்டன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையின் போது வரையப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது நாடாளுமன்ற கீழவையில் சர்ச்சை ஏற்பட்டு அந்நாட்டு அதிபர் தெரசா மே பதவி
 

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதில் சிம்பன்ஸிகள் அமர்ந்திருப்பது போன்ற ஓவியம் ரூ. 85 கோடிக்கு ஏலமிடப்பட்டுள்ளது. 

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதில் சிம்பன்ஸிகள் அமர்ந்திருப்பது போன்ற ஓவியம் ரூ. 85 கோடிக்கு ஏலமிடப்பட்டுள்ளது. 

லண்டனில் தெருவோர ஓவியரான பேங்க்சி என்பவர் வரையப்பட்ட இந்த ஓவியம் பிரிட்டன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையின் போது வரையப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது நாடாளுமன்ற கீழவையில் சர்ச்சை ஏற்பட்டு அந்நாட்டு அதிபர் தெரசா மே பதவி விலகியது குறிப்பிடதக்கது. 

இந்நிலையில் நாடாளுமன்றத்தினுள் உள்ள இருக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதில் சிம்பன்ஸி குரங்குகள் அமர்ந்திருப்பது போலவும், அந்த மனித குரங்குகளை சபாநாயகர் இருக்கையில் இருக்கும் இன்னொரு சிம்பன்ஸி வழிநடத்துவது போலவும் ஓவியம் வரையப்பட்டிருக்கும். சுமார் 13 அடி நீளமுடைய இந்த ஓவியம் 2009 ஆம் ஆண்டு வரையப்பட்டதாகும். இந்த ஓவியம் சோத்பை என்ற நிறுவனத்தால் லண்டனில் ஏலம் விடப்பட்டது. சுமார் 13 கோடிக்குதான் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த ஓவியம் ஏலம் விடபட்ட 13 நிமிடங்களில் சுமார் 85 கோடி ரூபாய்க்கு ஏலம்போனது. இதுவரை ஒரு ஒவியம் பிரிட்டனில் இவ்வளவு விலைக்கு ஏலம்போகவில்லை என்பது குறிப்பிடதக்கது.