×

நடுவானில் இயந்திர கோளாறு: விமானத்தில் தூக்கி வீசப்பட்ட பயணிகள்; வைரல் வீடியோ!

நடுவானில் ஏற்பட்ட விமான கோளாறால் பயணிகள் பலர் காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிஸ்டினா : நடுவானில் ஏற்பட்ட விமான கோளாறால் பயணிகள் பலர் காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. My absolute worst nightmare. Severe turbulence throws flight attendant and beverage cart into the plane ceiling. Hope everyone was ok!! pic.twitter.com/ZC8NmXxBkZ — H Λ R R I S O N (@harrisonyt) June
 

நடுவானில் ஏற்பட்ட விமான கோளாறால்  பயணிகள் பலர்  காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிஸ்டினா : நடுவானில் ஏற்பட்ட விமான கோளாறால்  பயணிகள் பலர்  காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சுவிட்சர்லாந்தின் பேசல் நகருக்கு கொசோவோ தலைநகர் பிரிஸ்டினாவிலிருந்து  பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது.  விமானம் புறப்பட்ட அரைமணி நேரத்திற்குள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானம் நிலைதடுமாறியுள்ளது. அப்போது பணிப்பெண் ஒருவர் பயணிகளுக்குக் உணவு  கொண்டுவர உணவு பொருட்கள் தூக்கி வீசப்பட்டது. அப்போது உணவு வண்டியில் இருந்த சூடான காபி கொட்டியதில் பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

விமானம் கட்டுப்பாட்டினை மீறி தாறுமாறாக பறந்ததில், பயணிகள் பலரும் சீட்டிலிருந்து தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விமானத்தில் நடந்த களேபரத்தைப் பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில்  வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.