×

தொழிற்சாலையை திறந்து வைக்கும் அதிபர் கிம் ஜாங்..உடல்நிலை சரியில்லை என வெளியான தகவல்கள் தவறா?!

அவரது உடல்நிலை சரியில்லை என்றும் அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பரபரப்பான செய்திகள் வெளியாகின. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அவரது உடல்நிலை சரியில்லை என்றும் அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பரபரப்பான செய்திகள் வெளியாகின. அவரின் உடல் பருமன், புகைபிடித்தல் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக அவர், அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டு வந்தது. ஆனால், வட கொரியாவில் இருந்து அதிபர் கிம் ஜாங்கின் உடல்நிலை மோசமாக இருப்பதாக
 

அவரது உடல்நிலை சரியில்லை என்றும் அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பரபரப்பான செய்திகள் வெளியாகின.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அவரது உடல்நிலை சரியில்லை என்றும் அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பரபரப்பான செய்திகள் வெளியாகின. அவரின் உடல் பருமன், புகைபிடித்தல் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக அவர், அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும்  கூறப்பட்டு வந்தது. ஆனால், வட கொரியாவில் இருந்து அதிபர் கிம் ஜாங்கின் உடல்நிலை மோசமாக இருப்பதாக எந்த வித செய்தியும் அதிகாரப் பூர்வமாக வெளியாகவில்லை. அங்கிருந்து வெளியாகும் தகவல்களின் மூலமாக சிஎன்என், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தி வெளியிட்டிருந்தது . இதனிடையே வடகொரியா அதிபருக்கு உடல்நலம் சரியில்லை என கூறப்பட்ட செய்திக்கு தென்கொரியாவும் மறுப்பு தெரிவித்தது. 

இந்நிலையில் வட கொரியா அதிபர் உரத்தொழிற்சாலையை திறந்து வைக்கும் புகைப்படங்களை வட கொரியா வேளியிட்டுள்ளது. அவரது உடல்நிலை குறித்து வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக வட கொரிய அதிபர் உடல்நிலை நலமாக இருக்கிறது என்பது உறுதியாகிறது.