×

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட முன்னாள் அதிபர்?!..

லத்தின் அமெரிக்க தலைவர்கள் பலருக்கும் தொடர்புடைய ஒரு மாபெரும் ஊழல் குற்றச்சாட்டில் இவர் மீதும் குற்றம்சுமத்தப்பட்டு, விசாரணை செய்ய போலீசார் அவரது இல்லத்திற்கு வந்தனர். விசாரணைக்கு பின் அலன் கைது செய்யப்பட வாய்ப்பிருந்ததாக கூறப்படுகிறது. பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அலன் கார்சியா, தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1985-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு மற்றும் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டுகளில்
 

லத்தின் அமெரிக்க தலைவர்கள் பலருக்கும் தொடர்புடைய ஒரு மாபெரும் ஊழல் குற்றச்சாட்டில் இவர் மீதும் குற்றம்சுமத்தப்பட்டு, விசாரணை செய்ய போலீசார் அவரது இல்லத்திற்கு வந்தனர். விசாரணைக்கு பின் அலன் கைது செய்யப்பட வாய்ப்பிருந்ததாக கூறப்படுகிறது.

பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அலன் கார்சியா, தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1985-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு மற்றும் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டுகளில் பெரு நாட்டின் அதிபராக இருந்தவர் அலன் கார்சியா. லத்தின் அமெரிக்க தலைவர்கள் பலருக்கும் தொடர்புடைய ஒரு மாபெரும் ஊழல் குற்றச்சாட்டில் இவர் மீதும் குற்றம்சுமத்தப்பட்டு, விசாரணை செய்ய போலீசார் அவரது இல்லத்திற்கு வந்தனர். விசாரணைக்கு பின் அலன் கைது செய்யப்பட வாய்ப்பிருந்ததாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட இருப்பதை அறிந்த அலன் கர்சியா, அவமானத்தால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை தலைநகர் லிமாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அலன் கார்சியா மரணம் குறித்து தற்போதைய அதிபர் மார்ட்டின் விஸ்கரா,  “முன்னாள் அதிபர் அலன் கார்சியா மரண செய்தி கேட்டு உடைந்து போனேன். அவர் குடும்பத்துக்கும், அவரை நேசித்த அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என டிவீட் செய்துள்ளார். உலக தலைவர்கள் பலருடனும் நட்பு பாராடியவர் அலன் கார்சியா. அவர் இப்படியொரு முடிவை எடுப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

மரணம் அடைந்த அலன் கார்சியா ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருவதால், பெரு நாட்டில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதையும் வாசிங்க: தீக்கிரையானாலும் குறையாத கம்பீரம்; பாரீஸ் நோட்ரா-டாம் தேவாலயத்தின் முதல் புகைப்படங்கள்!