×

திருந்தாத ராஜபக்சே; எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது மிளகாய் பொடி அடித்து அட்டகாசம்!

இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் மிளகாய் பொடி அடித்து அட்டகாசம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் மிளகாய் பொடி அடித்து அட்டகாசம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. வாக்கெடுப்பில் ராஜபக்சே படுதோல்வி அடைந்ததாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா வெளியிட்ட அறிவிப்பை, அதிபர் சிறிசேனா
 

இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் மிளகாய் பொடி அடித்து அட்டகாசம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் மிளகாய் பொடி அடித்து அட்டகாசம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. வாக்கெடுப்பில் ராஜபக்சே படுதோல்வி அடைந்ததாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா வெளியிட்ட அறிவிப்பை, அதிபர் சிறிசேனா ஏற்க மறுத்துவிட்டார்.

இதற்கிடையே, இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. அப்போது ராஜபக்சே பேசுகையில், ரணில் விக்ரமசிங்க ஆதரவு எம்.பி.க்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் சபாநாயகர் ஜெயசூர்யா தாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடும் கூச்சல் குழப்பங்களுக்கு இடையே இன்றும் நாடாளுமன்றம் தொடங்கியது. அப்போது, மீண்டும் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில், ரணில் ஆதரவு எம்.பி.க்கள் மீது ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் மிளகாய் பொடி அடித்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதை தடுக்க வந்த சட்டசபையின் அவை காவலர்கள் மீதும் மிளகாய் பொடி கலந்த தண்ணீரை தெளித்துள்ளனர். இதனால், கண் எரிச்சல் ஏற்பட்டு எதிர்க்கட்சி எம்.பிக்களும், போலீசாரும் கடுமையாக சிரமப்பட்டுள்ளனர்.

பதவியை தக்க வைத்துக் கொள்ள இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து அரசியல் செய்யும் நிலைக்கு ராஜபக்சே தள்ளப்பட்டது பெரும் வருத்தம் அளிப்பதாகவும், அவர் திருந்துவது போல் தெரியவில்லை என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.