×

தாய்லாந்து அரசர் 4-ஆவது திருமணம்; தனிப் பாதுகாப்பு அதிகாரி அரசி ஆகிறார்?!..

70-ஆண்டுகளுக்கு மேலாக தாய்லாந்தை ஆட்சி புரிந்த அரசர் பூமிபோன் அடுல்ய தேஜ், கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார். தாய்லாந்து அரசராக முடிசூட்டவுள்ள வஜ்ஜிரலொங்கோர்ன் தனது தனிப் பாதுகாப்பு அதிகாரியை திருமணம் செய்துகொண்டார். 70-ஆண்டுகளுக்கு மேலாக தாய்லாந்தை ஆட்சி புரிந்த அரசர் பூமிபோன் அடுல்ய தேஜ், கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார். அவர் மறைவுக்கு பிறகு அவரது மகன் வஜ்ஜிரலொங்கோர்ன் அரசனாக முடிசூட்ட உள்ளார். 70 ஆண்டுகளுக்கு பிறகு முடிசூட்டு விழா நடக்க
 

70-ஆண்டுகளுக்கு மேலாக தாய்லாந்தை ஆட்சி புரிந்த அரசர் பூமிபோன் அடுல்ய தேஜ், கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார்.

தாய்லாந்து அரசராக முடிசூட்டவுள்ள வஜ்ஜிரலொங்கோர்ன் தனது தனிப் பாதுகாப்பு அதிகாரியை திருமணம் செய்துகொண்டார்.

70-ஆண்டுகளுக்கு மேலாக தாய்லாந்தை ஆட்சி புரிந்த அரசர் பூமிபோன் அடுல்ய தேஜ், கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார். அவர் மறைவுக்கு பிறகு அவரது மகன் வஜ்ஜிரலொங்கோர்ன் அரசனாக முடிசூட்ட உள்ளார். 70 ஆண்டுகளுக்கு பிறகு முடிசூட்டு விழா நடக்க இருப்பதால் தாய்லாந்து முழுக்க திருவிழா போல காட்சியளிக்கிறது. மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த முடிசூட்டு விழாவுக்கான வேலைகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவை சிறப்பிக்க பிரமாண்ட ராணுவ ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வஜ்ஜிரலொங்கோர்ன் தனது தனிப் பாதுகாப்பு அதிகாரி சுதிடாவை திருமணம் செய்துள்ளதாக அரண்மனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விமானப் பணிப்பெண்ணாக இருந்த சுதிடா மீது கொண்ட காதலால், அவரை தனது தனிப் பாதுகாப்பு அதிகாரியாக வஜ்ஜிரலொங்கோர்ன் நியமித்திருக்கிறார். 2014-ஆம் ஆண்டு முதல் சுதிடா தனிப் பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்திருக்கிறார்.

அதன்பிறகு இருவருக்கும் தொடர்பு என செய்தி பரவ ஆரம்பித்துள்ளது. தந்தையின் மரணத்துக்கு பிறகு சுதிடாவை கரம்பற்றியிருக்கிறார் வஜ்ஜிரலொங்கோர்ன். இது அவருக்கு நான்காவது திருமணம், ஏற்கனவே திருமணம் செய்த பெண்கள் மூலம் இவருக்கு 7 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மே 4-ஆம் தேதி முதல் சுதிடா தாய்லாந்தின் அரசி.