×

தாஜ் ஹோட்டலின் உணவை சாப்பிட்ட 29 பேருக்கு நேர்ந்த கொடூரம்! 

பிரபல தாஜ் கேட்டரிங் நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தாஜ் கேட்டரிங் நிறுவனத்தின் உணவை உட்கொண்டவர்களில் 29 பேர் gastroenteritis எனும் வயிற்றுக் கோளாற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரிலுள்ள தாஜ் கேட்டரிங் உணவகத்தில் நவம்பர் 2 ஆம் தேதி தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் தொடர்ச்சியாக தொடர்ச்சியாக 28 பேர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது என்று சுகாதார அமைச்சகம் (எம்ஓஎச்) மற்றும் சிங்கப்பூர் உணவு
 

பிரபல தாஜ் கேட்டரிங் நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தாஜ் கேட்டரிங் நிறுவனத்தின் உணவை உட்கொண்டவர்களில் 29 பேர் gastroenteritis எனும் வயிற்றுக் கோளாற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சிங்கப்பூரிலுள்ள தாஜ் கேட்டரிங் உணவகத்தில் நவம்பர் 2 ஆம் தேதி தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் தொடர்ச்சியாக தொடர்ச்சியாக 28 பேர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது என்று சுகாதார அமைச்சகம் (எம்ஓஎச்) மற்றும் சிங்கப்பூர் உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்பின் தாஜ் கேட்டரிங் உணவகத்தை ஆய்வு செய்ததில் உணவில் சுகாதார குறைபாடு இருப்பது தெரியவந்தது. உணவக சமையலறை, உபகரணங்கள் மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்டவை சுத்தமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் உணவை தரமாக சமைக்குமாறும், சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறு கூறி தாஜ் கேட்டரிங் நிறுவனத்தின் உரிமத்தை சிங்கப்பூர் உணவு நிறுவனம் ரத்து செய்துள்ளது.