×

‘தம்பி அதிபர்…அண்ணன் பிரதமர்’ :மீண்டும் ராஜபக்ச குடும்பத்தின் பிடியில் சிக்கிய இலங்கை!

கோத்தபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் வென்றுள்ளார்.மொத்தம் 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்றுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாசவும், இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் மகேந்திர ராஜபக்ச சகோதரர் கோத்தபய ராஜபக்சவும் போட்டியிட்டனர். இதில் கோத்தபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் வென்றுள்ளார்.மொத்தம் 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்றுள்ளார். கோத்தபய வெற்றி பெற்றதால், பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க
 

கோத்தபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் வென்றுள்ளார்.மொத்தம் 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்றுள்ளார்.  

இலங்கை அதிபர் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாசவும், இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் மகேந்திர ராஜபக்ச  சகோதரர் கோத்தபய ராஜபக்சவும்  போட்டியிட்டனர்.    இதில் கோத்தபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் வென்றுள்ளார்.மொத்தம் 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்றுள்ளார்.  

கோத்தபய வெற்றி பெற்றதால், பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவை, பிரதமராக நியமித்துள்ளார் அதிபர் கோத்தபய. இதன் மூலம் இலங்கை மீண்டும் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சியின் கீழ் வந்துள்ளது. 

முன்னதாக  மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபய ராஜபக்சவின் தந்தை டான் ஆல்வின் ராஜபக்ச இலங்கையின் மிகமூத்த அரசியல்வாதி ஆவார். இவரது மறைவுக்கு பிறகு மகிந்த ராஜபக்ச  மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் நேரடியாக அரசியல் களத்தில்  குதித்தனர். ராஜபக்ச, 2004-ஆம் ஆண்டில் இலங்கையின் 13-வது பிரதமராகவும், அடுத்த ஆண்டே அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மகிந்த ராஜபக்சவின் அரசில், கோத்தபய ராஜபக்சவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

  மகிந்த ராஜபக்சவின் மற்றொரு சகோதரர் சமல் ராஜபக்ச தற்போதும் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்ச முன்னாள் அமைச்சராக இருந்தவர். இப்படி கிட்டத்தட்ட பல ஆண்டுகள் இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இந்த குடும்பம், 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தது. 

தற்போது மீண்டும் சிங்களர்களின் பெருவாரியான ஆதரவு பெற்று  கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதன் மூலம் இந்த ஆதிக்கமும், ஆட்சியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.