×

ஜப்பானில் மருத்துவமனையில் இருந்து 6000 சுகாதார முகமூடிகளை திருடிய மர்ம நபர்கள்

ஜப்பானில் மருத்துவமனையில் இருந்து சுமார் 6000 சுகாதார முகமூடிகளை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் அரங்கேறி உள்ளது. டோக்கியோ: ஜப்பானில் மருத்துவமனையில் இருந்து சுமார் 6000 சுகாதார முகமூடிகளை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் அரங்கேறி உள்ளது. சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ்
 

ஜப்பானில் மருத்துவமனையில் இருந்து சுமார் 6000 சுகாதார முகமூடிகளை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

டோக்கியோ: ஜப்பானில் மருத்துவமனையில் இருந்து சுமார் 6000 சுகாதார முகமூடிகளை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2004 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 136 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில், ஜப்பானில் உள்ள ரெட் கிராஸ் என்ற மருத்துவமனையில் இருந்து சுமார் 6000 சுகாதார முகமூடிகளை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் அரங்கேறி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க பிரதான பயன்பாடாக உலகம் முழுக்க மக்கள் சுகாதார முகமூடிகளையே அணிந்து வருகின்றனர். இதனால் இத்தகைய முகமூடிகளின் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஜப்பானிலும் சுகாதார முகமூடிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆன்லைனில் மிக அதிக விலையில் சுகாதார முகமூடிகள் அங்கு விற்கப்படுகின்றன. முகமூடி உற்பத்தியை அதிகரிக்குமாறு சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடம் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.