×

சோசியல் மீடியா மேனேஜர் வேலைக்கு 26.5 லட்சம் சம்பளம்!! எங்க தெரியுமா??

பக்கிங்காம் அரண்மனையில் பிரிட்டன் அரசின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் சோசியல் மீடியா மேனேஜராக பணிபுரிய 26.5 லட்சம் சம்பளத்துடன் கூடிய வேலை இருப்பதாக அண்மையில் வெளியிடப்பட்டது. பக்கிங்காம் அரண்மனையில் பிரிட்டன் அரசின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் சோசியல் மீடியா மேனேஜராக பணிபுரிய 26.5 லட்சம் சம்பளத்துடன் கூடிய வேலை இருப்பதாக அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்கு பல பக்கங்களிலிருந்தும் விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. பிரிட்டன் அரசின் மகாராணி இரண்டாவது எலிசபெத் பக்கிங்காம் அரண்மனையில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு
 

பக்கிங்காம் அரண்மனையில் பிரிட்டன் அரசின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் சோசியல் மீடியா மேனேஜராக  பணிபுரிய  26.5 லட்சம் சம்பளத்துடன் கூடிய வேலை  இருப்பதாக  அண்மையில் வெளியிடப்பட்டது.

பக்கிங்காம் அரண்மனையில் பிரிட்டன் அரசின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் சோசியல் மீடியா மேனேஜராக  பணிபுரிய  26.5 லட்சம் சம்பளத்துடன் கூடிய வேலை  இருப்பதாக  அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்கு பல பக்கங்களிலிருந்தும் விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன.

பிரிட்டன் அரசின் மகாராணி இரண்டாவது எலிசபெத் பக்கிங்காம் அரண்மனையில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு தெரியப்படுத்த சமூக வலைதளங்களை பயன் படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். கடந்த மாதம் முதல் முறையாக இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் துவங்கப்பட்டது. அதில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளையும் குடும்பத்தினரின் புகைப்படங்களையும் வெளியிட்டு மக்களுடன் தொடர்பில் இருக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார். 

93 வயதான இவருக்கு சமூக வலைதளங்கள் மிகவும் பரிச்சயமான ஒன்றாக இல்லை என்பதனால் இவருக்கு கற்றுக்கொடுக்கும் விதமாகவும், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் என அனைத்து வித சமூக வலைதளங்களில் இருக்கும் இவரது கணக்குகளையும் மேலாளராக இருந்து பார்த்துக் கொள்ள ஒருவர் தேவை என காலியிடம் அறிவிக்கப்பட்டது. இந்த தேவைக்கான அரசு விளம்பரங்களும் வெளியிடப்பட்டு இதற்காக பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

பேஸ்புக் இன்ஸ்டாகிராம் டுவிட்டர் என அனைத்திலும் கையாள திறமையானவர்கள் ஆகவும், தொழில்நுட்பங்களில் இருக்கும் சிக்கல்களை எளிதாக களைய கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தீவிரமாக முன்வைத்து விண்ணப்பங்களை அலசி ஆராய்கின்றனர்.

அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஒன்று என்னவென்றால் இதற்கான சம்பளம் இன்றைய இந்திய ரூபாய் மதிப்பின்படி 26.5 லட்சம் ஆகும். கூடுதல் சலுகைகள் ஆக தினமும் மதிய உணவு இலவசமாகவும் வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே வேலை இருக்கும் எனவும் தெரிவித்து இருந்தது. அதிலும் வாரத்திற்கு 37.5 மணி நேரம் வேலை பார்த்தால் போதுமானது என்ற எளிய விதிமுறைகளையும் முன்னமே தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், டிஜிட்டல் கம்யூனிகேஷன் ஆபீஸர் என்கிற பெயரில் கொடுக்கப்படும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 22ஆம் தேதி ஆகும்.

இது குறித்து மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள பக்கிங்காம் அரண்மனையின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் பார்க்குமாறு தெரிவிக்கப்பட்டது.