×

செல்ஃபி எடுக்க போய் பரலோகம் போனவங்க லிஸ்ட்ல எந்த நாடு டாப்ல இருக்குன்னு தெரியுமா?

உலக அளவில் செல்ஃபி எடுக்கும்போது பலியானவர்களில் இந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் செல்ஃபி எடுக்கும்போது பலியானவர்களில் இந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. உலகில் அனைவரும் செல்ஃபி எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அதனால் மிகப்பெரிய இழப்புகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சந்தோஷமான சமயங்களில் செல்ஃபி எடுக்கப்பட்ட நிலை சென்று தற்போது இறப்பு, விபத்து போன்ற துக்கமான நிகழ்வுகளிலும் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.
 

உலக அளவில் செல்ஃபி எடுக்கும்போது பலியானவர்களில்  இந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் செல்ஃபி எடுக்கும்போது பலியானவர்களில்  இந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் அனைவரும் செல்ஃபி எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அதனால் மிகப்பெரிய இழப்புகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சந்தோஷமான சமயங்களில் செல்ஃபி எடுக்கப்பட்ட நிலை சென்று தற்போது இறப்பு, விபத்து போன்ற துக்கமான நிகழ்வுகளிலும் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றி வருகின்றனர். செல்ஃபியின் மோகம்  நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்லும் நிலையில் உயிரிழப்பு சம்பவங்களும் அதிகமாகி கொண்டே போகிறது. 

இந்நிலையில் குடும்ப மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதாரம் தொடர்பான ஒரு இதழில் வெளியாகியுள்ள அறிக்கையில், இந்தியாவில் மக்கள் செல்ஃபி எடுக்க அதிக ஆபத்துகளைச் சந்திக்கிறார்கள். குறிப்பாக ரயில் முன் நின்றும் , நீர் நிலைகளில் நின்றும் புகைப்படம் எடுப்பதன் மூலம் பலியாகி வருகின்றனர். மேலும் உயரமான இடங்களிலிருந்து விழுந்தும் துப்பாக்கிகளால் எதிர்பாராத விதமாகச் சுட்டுக்கொண்டும் செல்ஃபி உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது.

குறிப்பாக  உலகம் முழுவதும்  2011 முதல் 2017 வரை  259 பேர் செல்ஃபியால் உயிரிழந்திருப்பதாகவும் அதில் இந்தியாவில்   மட்டும் 159 உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது  என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதே காலங்களில் சுறா மீன்கள் தாக்கியதில் 50 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக  அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.