×

சுற்றுலா பயணிகள் வரத்து குறைவு; இலங்கையின் பொருளாதாரம் கடும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம்!

இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை படைத் தீவிரவாத தாக்குதலில் சிக்கி சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலின் எதிரொலியாக அந்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்களை குறி வைத்து 8 இடங்களில் நடத்தப்பட்ட நடத்தப்பட்ட தற்கொலை படைத் தீவிரவாத தாக்குதலில் சிக்கி சுமார் 250-க்கும் மேற்பட்டோர்
 

இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை படைத் தீவிரவாத தாக்குதலில் சிக்கி சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலின் எதிரொலியாக அந்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்களை குறி வைத்து 8 இடங்களில் நடத்தப்பட்ட நடத்தப்பட்ட தற்கொலை படைத் தீவிரவாத தாக்குதலில் சிக்கி சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலின் பதற்றம் இன்னும் குறையாத நிலையில், அங்கு அடுத்தடுத்து வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படுவதும், தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படுவதும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு மிக முக்கியமான பயணத்தை தவிர்த்து இதர பயணங்களை ரத்து செய்யுமாறு தங்களது நாட்டை சேர்ந்த குடிமக்களுக்கு பல்வேறு நாடுகளும் அறிவுறுத்தியுள்ளன.

இந்நிலையில், இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளின் வரத்து 30 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுலா துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த இரண்டு மாதத்தில் 50 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சுற்றுலா துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நாட்டு சுற்றுலாத் தளங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டிற்கு சுமார் 4.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் சுற்றுலாத்துறை மூலமாக ஈட்டப்படுகிறது. இந்த நிலையில், குண்டுவெடிப்பு எதிரொலியாக, தற்போது சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைவாகியுள்ளதால், சுமார் 750 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இழப்பை சந்திக்க அந்நாடு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அந் நாட்டின் பொருளாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகக் கூடும் என தெரிகிறது.