×

சுதந்திர தினம் கொண்டாடப்போய் உயிரிழந்த 16 பேர்!

ராணுவ வீரர்களின் அணிவகுப்பு, விமானப்படை விமானங்களின் சாகசம், வானிலிருந்து பூ தூவுவது, குட்டிக்கரணம் அடிப்பது என ஹைடெக் வித்தைகள் காட்டப்பட்டன. பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்ற 59ஆவது ஆண்டு விழாவையொட்டி, ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரே விழாக்கோலம் காணப்பட்டது. தலைநகர் ஆண்டனநரிவோவில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு, விமானப்படை விமானங்களின் சாகசம், வானிலிருந்து பூ தூவுவது, குட்டிக்கரணம் அடிப்பது என ஹைடெக் வித்தைகள் காட்டப்பட்டன. விழா நடந்த மைதானத்தில் மக்கள் திரளாக கூடியிருந்தனர். விழா முழுவதும் சிறப்பாக, மக்கள் மனம் மகிழும்
 

ராணுவ வீரர்களின் அணிவகுப்பு, விமானப்படை விமானங்களின் சாகசம், வானிலிருந்து பூ தூவுவது, குட்டிக்கரணம் அடிப்பது என ஹைடெக் வித்தைகள் காட்டப்பட்டன.

பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்ற 59ஆவது ஆண்டு விழாவையொட்டி, ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரே விழாக்கோலம் காணப்பட்டது. தலைநகர் ஆண்டனநரிவோவில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு, விமானப்படை விமானங்களின் சாகசம், வானிலிருந்து பூ தூவுவது, குட்டிக்கரணம் அடிப்பது என ஹைடெக் வித்தைகள் காட்டப்பட்டன. விழா நடந்த மைதானத்தில் மக்கள் திரளாக கூடியிருந்தனர். விழா முழுவதும் சிறப்பாக, மக்கள்  மனம் மகிழும் வகையில் நடந்து முடிந்தது. அதற்குப் பிறகுதான் கெட்ட நேரம் ஆரம்பித்தது.

விழா முடிந்து எல்லாரும் மைதானத்தைவிட்டு ஒரே நேரத்தில் வெளியேறினர். மைதானத்திலிருந்து வெளியேறுவதற்கு முறையான வழிகள் அமைக்கப்பட்டிருந்தும், உடனடியாக வெளியேறவேண்டும் என்ற ஆர்வத்தில், மக்கள் அவசரப்பட ஆரம்பித்தனர். களேபரம் ஆகக்கூடும் என்ற கவலையில், மக்களை குழுக்களாகப் பிரித்து அனுப்புவதில் போலீசார் கவனம் செலுத்தினர். ஆயினும், பொறுமையிழந்த ஒரு சிலரால் தள்ளுமுள்ளாகி, ஏற்பட்ட நெருக்கடியில் சிக்கி 16 பேர் அனாசியமாக உயிரிழந்தனர். மேலும் 75 பேர்  படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.