×

சீனாவுக்கு சுற்றுலா சென்றவர்கள் இந்தியா திரும்ப தடை! 

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் உலக நாடுகள் ஸ்தம்பித்துப்போய் உள்ளன. சீனாவுக்கு சுற்றுலா சென்றவர்கள் இந்தியா திரும்பி வர மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதனால் பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் உள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கொரோனா
 

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் உலக நாடுகள் ஸ்தம்பித்துப்போய் உள்ளன.

சீனாவுக்கு சுற்றுலா சென்றவர்கள் இந்தியா திரும்பி வர மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதனால் பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் உள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் உலக நாடுகள் ஸ்தம்பித்துப்போய் உள்ளன.

இந்த நிலையில் சீனாவில் சிக்கிய மாணவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அது பெருமளவு வரவேற்பைப் பெற்றது. பாகிஸ்தான் அரசு தங்கள் மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காத நிலையில் இந்திய அரசின் செயல் பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள சீனாவுக்கு கடந்த இரண்டு வாரங்களில் சுற்றுலா சென்ற இந்தியர்கள் நாடு திரும்ப தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால், சீனா சென்றுவிட்டு மற்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பத் திட்டமிட்டிருந்த ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட காலத்துக்குத் தேவையான பணத்தை மட்டுமே எடுத்துச் சென்றோம். இந்தியா திரும்பக் கூடாது என்றால் நாங்கள் எங்கே செல்வது என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சீன பயணிகளுக்கான இ-வீசா தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சீனாவுக்கு சென்ற இந்தியர்கள் நாடு திரும்பக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.