×

 சீக்கிய மத குரு ‘குருநாநக்’ அரண்மனை இடிப்பு..! பாகிஸ்தானில் பதட்டம்.!!

பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தின் தலை நகரம் லாகூரிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள நரோவால் கிராமத்தில் இருக்கிறது சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் அரண்மனை.இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.இதை யாரோ சமூக விரோதிகள் உடைத்துவிட்டதால் அந்தப் ககுதியில் பதட்டம் நிலவுகிறது பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தின் தலை நகரம் லாகூரிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள நரோவால் கிராமத்தில் இருக்கிறது சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் அரண்மனை.இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்
 

பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தின் தலை நகரம் லாகூரிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள நரோவால் கிராமத்தில் இருக்கிறது சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் அரண்மனை.இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.இதை யாரோ சமூக விரோதிகள் உடைத்துவிட்டதால் அந்தப் ககுதியில் பதட்டம் நிலவுகிறது

பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தின் தலை நகரம் லாகூரிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள நரோவால் கிராமத்தில் இருக்கிறது சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் அரண்மனை.இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.இதை யாரோ சமூக விரோதிகள் உடைத்துவிட்டதால் அந்தப் ககுதியில் பதட்டம் நிலவுகிறது.

நான்குமாடிக் கட்டிடமான இந்த அரண்மனையின் உட்புற சுவர்களில் குருநானக் மற்றும் பல பண்டைய ஆட்சியாளர்கள் ஓவியங்கள் இருந்தன. கட்டிடத்தில் இருந்த தூண்கள்,ஜன்னல்கள், கதவுகள் எல்லாம் விலையுயர்ந்த மரங்களால் ஆனவை.மிகுந்த நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டவை.
கட்டிடத்தை இடித்த சமூகவிரோதிகள் இவற்றை எல்லாம் பெயர்த்து எடுத்துச்சென்று விட்டனர்.

உலகம் முழுவதுமுள்ள சீக்கிய மதத்தினரின் கவனத்துக்கும்,வணக்கத்துக்கும் உரியதான இந்தக் கட்டிடத்தை மதவிவகாரத்துறை அதிகாரிகளின் உதவியுடன் இந்தக் கட்டிடத்தை இடித்து அதிலிருந்த பழம் பொருட்களை விற்றுவிட்டதகச்  பாக்கிஸ்தானின் பிரபல நாளேடான ‘டான்’ சொல்லியிருக்கிறது.

இந்தக் கட்டடம் யாரோ செல்வாக்கு மிக்கவர்களின் தூண்டுதலின் பேரில்தான் இடிக்கப்பட்டு இருக்கிறது .பாகிஸ்தானில் இப்படி நடப்பது வருத்தமாக இருக்கிறது.அரசு அதிகாரிகள் ஆதரவு இல்லாமல் இது நடந்திருக்காது என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

இந்தக் கட்டடம் யாருக்குச் சொந்த மானது என்பதை கண்டுபிடிக்க டான் செய்தித்தாளின் முயற்சியில் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. இதற்கிடையே,இந்தக் கட்டிடத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் இம்ரான்கானுக்கு உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.