×

சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் உறவினால் உரிமத்தை இழந்த தமிழ் மருத்துவர்!

பணியில் இருந்தபோது அவரிடம் சிகிச்சை பெறவந்த நோயாளியிடம் பாலியல் உறவு கொண்டிருந்த குற்றச்சாட்டில் அவருடைய மருத்துவர் உரிமம் பறிக்கப்பட்டது. தன்மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டாலும், வழக்கு நடந்துவந்த இத்தனை நாட்களும் இதுகுறித்து தீபா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. தீபா சுந்தரலிங்கம், கனடாவின் டொராண்டோ மருத்துவமனையில் பணியாற்றும் புற்றுநோய் மருத்துவர், தமிழை பூர்விகமாகக் கொண்டவர். அன்னாருக்கு இப்போது தர்மசங்கடமான சூழ்நிலை. பணியில் இருந்தபோது அவரிடம் சிகிச்சை பெறவந்த நோயாளியிடம் பாலியல் உறவு கொண்டிருந்த குற்றச்சாட்டில் அவருடைய மருத்துவர் உரிமம்
 

பணியில் இருந்தபோது அவரிடம் சிகிச்சை பெறவந்த நோயாளியிடம் பாலியல் உறவு கொண்டிருந்த குற்றச்சாட்டில் அவருடைய மருத்துவர் உரிமம் பறிக்கப்பட்டது. தன்மீதான‌ குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டாலும், வழக்கு நடந்துவந்த இத்தனை நாட்களும் இதுகுறித்து தீபா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

தீபா சுந்தரலிங்கம், கனடாவின் டொராண்டோ மருத்துவமனையில் பணியாற்றும் புற்றுநோய் மருத்துவர், தமிழை பூர்விகமாகக் கொண்டவர். அன்னாருக்கு இப்போது தர்மசங்கடமான சூழ்நிலை. பணியில் இருந்தபோது அவரிடம் சிகிச்சை பெறவந்த நோயாளியிடம் பாலியல் உறவு கொண்டிருந்த குற்றச்சாட்டில் அவருடைய மருத்துவர் உரிமம் பறிக்கப்பட்டது. தன்மீதான‌ குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டாலும், வழக்கு நடந்துவந்த இத்தனை நாட்களும் இதுகுறித்து தீபா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், தற்போது நீதிமன்றத்தை அணுகியுள்ள தீபா, நடந்த சம்பவத்தில் தான் குற்றவாளி அல்ல என்றும், உண்மையில் பாதிக்கப்பட்ட நபர் தானே என்றும் கூறியுள்ளார். தன்னை உணர்வு ரீதியாக கட்டுப்படுத்தி, தன்னை பயன்படுத்திக்கொள்ள மேற்கொண்ட முயற்சியில் பாதிக்கப்பட்ட நபர் தான் என்று நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள தீபா, தன்னுடன் உறவு கொள்ளவில்லை என்றால், தான் அனுப்பிய குறுந்தகவல்களை மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பிவிடுவதாக தான் மிரட்டப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். தன்மீது குற்றம் சாட்டப்பட்ட அவமானத்தால்தான் இதுநாள்வரை தான் பேசவில்லை என்றும், இப்போது தன் பக்க நியாயத்தை நீதிமன்றம் கேட்கவேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.