×

சிகரட் புகைக்கு குறைந்தல்ல ஊதுபத்தி புகை,சீனாக்காரன் ஆராய்ச்சி!

அநேகமாக உலகிலுள்ள எல்லா மத வழிபாட்டிலும் இடம்பிடித்திருக்கும் அகர்பத்திப் புகைக்கும், சிகரட் புகைக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.அகர் பத்தி புகையும் உடல் நலத்துக்கு உகந்தல்ல என்கிறார்கள் சீன விஞ்ஞானிகள். அநேகமாக உலகிலுள்ள எல்லா மத வழிபாட்டிலும் இடம்பிடித்திருக்கும் அகர்பத்திப் புகைக்கும், சிகரட் புகைக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.அகர் பத்தி புகையும் உடல் நலத்துக்கு உகந்தல்ல என்கிறார்கள் சீன விஞ்ஞானிகள். ஸ்பிரிங்கர்ஸ் ஜர்னல் என்கிற
 

அநேகமாக உலகிலுள்ள எல்லா மத வழிபாட்டிலும் இடம்பிடித்திருக்கும் அகர்பத்திப் புகைக்கும், சிகரட் புகைக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.அகர் பத்தி புகையும் உடல் நலத்துக்கு உகந்தல்ல என்கிறார்கள் சீன விஞ்ஞானிகள்.

அநேகமாக உலகிலுள்ள எல்லா மத வழிபாட்டிலும் இடம்பிடித்திருக்கும் அகர்பத்திப் புகைக்கும், சிகரட் புகைக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.அகர் பத்தி புகையும் உடல் நலத்துக்கு உகந்தல்ல என்கிறார்கள் சீன விஞ்ஞானிகள்.

ஸ்பிரிங்கர்ஸ் ஜர்னல் என்கிற அறிவியல் இதழில் ,அகர்பத்தியில் அபாயகரமான ரசாயனங்கள் ஏராளமாக கலந்திருப்பதாகவும் அவை அப்படியே சிகரட் புகையில் இருக்கும் ரசாயனங்களை ஒத்து இருப்பதாகவும் அவர்களின் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

காற்றோட்டம் இல்லாத அறைகளில் ஊதுபத்திகள் கொளுத்தப்படுவதால் அதில் இருக்கும்,mutagenic,genotaxic,cytotoxic போன்ற நச்சுப்பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்துவதுடன் டி.என்.ஏவில் கூட மாற்றம் ஏற்படுத்தம் என்கிறார்கள்.

அதோடு ,நுறையீரலுக்குள் தங்கும் அகர்பத்தி புகை எரிச்சலுண்டாக்குவதுடன், அதிலிருக்கும் 64 மூலப்பொருட்கள் மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிய வந்திருக்கிறது. ஊதுபத்தி புகையில் கலந்திருக்கும் மிக நுண்ணிய சாம்பல் துகள்கள், மூச்சுக்காற்று வழியே உள்ளே சென்று உடலுக்குள்ளேயே தங்கிவிடுகிறதாம்.

ஆகவே,அகர்பத்தி உபயோகிப்பதில் கவணமாக இருங்கள்,சிறு குழந்தைகள், முதியோர் இருக்கும்போது பத்தி கொளுத்துவதை தவிருங்கள்.அதிக கெடுதல் அகர்பத்தி புகையா,சிகரெட் புகையா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை என்கிறது அந்த ஆய்வு முடிவு.