×

சாலை விபத்தில் சிக்கிய திருமண கோஷ்டி: 20 பேர் உயிரிழந்த பரிதாபம்!

நண்பரின் திருமணத்திற்காக சென்றபோது நேர்ந்த கார் விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்: நண்பரின் திருமணத்திற்காக சென்றபோது நேர்ந்த கார் விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமேரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள சோஹரி பகுதியில் நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக புதிதாக திருமணம் முடிந்த தம்பதி உட்பட 18 பேர் ஒரே காரில் சென்றுள்ளனர். 18-பேரும் பயணம் செய்த Limo வகை கார், மலைப்பகுதியில்
 

நண்பரின் திருமணத்திற்காக சென்றபோது நேர்ந்த கார் விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க்: நண்பரின் திருமணத்திற்காக சென்றபோது நேர்ந்த கார் விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமேரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள சோஹரி பகுதியில் நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக புதிதாக திருமணம் முடிந்த தம்பதி உட்பட 18 பேர் ஒரே காரில் சென்றுள்ளனர்.

18-பேரும் பயணம் செய்த Limo வகை கார், மலைப்பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கியுள்ளது. அந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த 18 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக நியூயார்க் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.