×

சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசார்; ஐநா அறிவிப்பு?!

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி ஐநாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று ஐநாவும் மசூத் அசாரை தீவிரவாதியாக அறிவிக்க முடிவு செய்தது. ஆனால் சீனா அதற்கு தடையாக இருந்தது. புல்வாமா தாக்குதலின் மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என ஐநா அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமாவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 40-க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி
 

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி ஐநாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று ஐநாவும் மசூத் அசாரை தீவிரவாதியாக அறிவிக்க முடிவு செய்தது. ஆனால் சீனா அதற்கு தடையாக இருந்தது.

புல்வாமா தாக்குதலின் மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என ஐநா அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமாவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 40-க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் சில பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தலைவன் மசூத் அசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாகிஸ்தான் அரசாங்கத்தை வலியுறுத்தியது இந்தியா.

அதேபோல் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி ஐநாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று ஐநாவும் மசூத் அசாரை தீவிரவாதியாக அறிவிக்க முடிவு செய்தது. ஆனால் சீனா அதற்கு தடையாக இருந்தது. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதை சீனா ஏற்கவில்லை. 

தற்போது தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா தன் முடிவை மாற்றியுள்ளது. அதனால் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என அறிவிப்பதற்கான தடை நீங்கியது. தற்போது அவனை சர்வதேச பயங்கரவாதி என ஐநா அறிவித்துள்ளது.