×

சம உரிமை கோரி வீதிக்கு வந்த பாகிஸ்தான் பெண்கள்

பாகிஸ்தான் நாட்டில் ஏராளமான பெண்கள் ஒன்று சேர்ந்து “அரட் மார்ச்” எனும் பேரணியை நடத்தி வருகின்றனர். பெண்களின் சக்தியை உலகம் அறியச் செய்வதற்காக, பெண்கள் தினத்தை ஒட்டி அவர்கள் ஒன்று கூடியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் ஏராளமான பெண்கள் ஒன்று சேர்ந்து “அரட் மார்ச்” எனும் பேரணியை நடத்தி வருகின்றனர். பெண்களின் சக்தியை உலகம் அறியச் செய்வதற்காக, பெண்கள் தினத்தை ஒட்டி அவர்கள் ஒன்று கூடியுள்ளனர். அரட் மார்ச் பாகிஸ்தானின் பெரும் நகரங்களான லாகூர், ஹைதராபாத் மற்றும் இஸ்லாமாத் போன்ற நகரங்களில்
 

பாகிஸ்தான் நாட்டில் ஏராளமான பெண்கள் ஒன்று சேர்ந்து “அரட் மார்ச்” எனும் பேரணியை நடத்தி வருகின்றனர். பெண்களின் சக்தியை உலகம் அறியச் செய்வதற்காக, பெண்கள் தினத்தை ஒட்டி அவர்கள் ஒன்று கூடியுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் ஏராளமான பெண்கள் ஒன்று சேர்ந்து “அரட் மார்ச்” எனும் பேரணியை நடத்தி வருகின்றனர். பெண்களின் சக்தியை உலகம் அறியச் செய்வதற்காக, பெண்கள் தினத்தை ஒட்டி அவர்கள் ஒன்று கூடியுள்ளனர்.

அரட் மார்ச்

பாகிஸ்தானின் பெரும் நகரங்களான லாகூர், ஹைதராபாத் மற்றும் இஸ்லாமாத் போன்ற நகரங்களில் கைகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் எழுதிய பதாகைகளோடு அவர்கள் கூடி வருகின்றனர். சம உரிமை கோரியும் , பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் சீண்டல்களுக்கு எதிராகவும், குழந்தை திருமணங்கள் மற்றும் கௌரவக் கொலைகளுக்கு எதிராகவும்  அவர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்த அரட் மார்ச் பேரணி கடந்த 2018 ஆம் ஆண்டு, அனைத்து தரப்பு பெண்களின் உரிமைகளைப் பேணுவதற்காக  கராச்சி நகரில் தொடங்கப்பட்டது. இந்தப் பேரணி ” ஹம் ஆரடின்” (நாங்கள் பெண்கள்) என்னும் அமைப்பால் தொடங்கப்பட்டதாகும்.

அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன 

“எங்களது அடிப்படை நோக்கம் பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை உறுதி செய்வது தான். பெண்களுக்கு பொருளாதாரப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, சமூகத்தில் சம உரிமை ஆகியவற்றை அளிப்பதாக பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டம் உறுதி அளித்துள்ளது. ஆனால் இன்றும் நாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம். எங்கள் அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய வலியுறுத்துவதையே நாங்கள் செய்கிறோம்.” என்று கூறுகிறார் இந்தப் பேரணியின் இணை ஒருங்கிணைப்பாளர் நிகாத் தத்.