×

சபாநாயகர் மீது தாக்குதல் முயற்சி; இலங்கை நாடாளுமன்றத்தில் பரபரப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா மீது ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் தாக்குதல் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா மீது ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் தாக்குதல் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியதும் ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே தரப்பினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர், அதில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தோல்வியடைந்தார். எனவே, ரணில் விக்ரமசிங்கே தரப்பு கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி
 

இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா மீது ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் தாக்குதல் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா மீது ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் தாக்குதல் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியதும் ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே தரப்பினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர், அதில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தோல்வியடைந்தார். எனவே, ரணில் விக்ரமசிங்கே தரப்பு கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்தார். ஆனால் உரிய விதிமுறைகளை பின்பற்றி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என கூறி அதிபர் சிறிசேனா நிராகரித்தார்.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்று மீண்டும் சமர்பிப்பதாகவும், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும்படியும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இதனையடுத்து ராஜபக்சே பேச சபாநாயகர் அனுமதி அளித்தார்.அப்போது உரையாற்றிய ராஜபக்சே, நான் சிறு வயதிலிருந்தே நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கின்றேன். மந்திரி பதவிக்காகவோ, பிரதமர் பதவிக்காகவோ நான் சபைக்கு வரவில்லை. இதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என பேசினார்.

இதனையடுத்து அவரது பேச்சு நிறைவடைந்ததும் நம்பிக்கை வாக்கெடுப்பை ஆரம்பிக்க முயற்சி செய்யப்பட்டது. அப்போது ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் ஆவேசத்துடன் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அமர்ந்திருந்த பகுதிக்கு ஓடிச்சென்று அவரை தாக்க முயன்றதால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.