×

சட்டையை திருடிய மெக்சிகோ தூதர்…வெளியான சிசிடிவி காட்சியால் பதவி விலகல்!

பிக்கார்டோ வலெரோ திருடியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போதும் அவர் சட்டை திருடியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. விமான நிலையத்தில் உள்ள கடையில் அர்ஜென்டினாவுக்கான மெக்சிகோ தூதர் சட்டை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினாவுக்கான மெக்சிகோ தூதராக பணியாற்றி வந்தவர் பிக்கார்டோ வலெரோ. 77 வயதாகும் இவர் உடல் நலப் பிரச்னைகளுக்காக பதவி விலகியுள்ளதாக மெக்சிகோவின் வெளியுறவு துறை அறிவித்துள்ளது. ஆனால் உண்மையில் பிக்கார்டோ வலெரோ விமானநிலையத்தில் இருந் அக்கடை ஒன்றில்
 

பிக்கார்டோ வலெரோ திருடியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போதும் அவர் சட்டை திருடியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

விமான நிலையத்தில் உள்ள கடையில்   அர்ஜென்டினாவுக்கான மெக்சிகோ தூதர் சட்டை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜென்டினாவுக்கான மெக்சிகோ தூதராக பணியாற்றி வந்தவர்  பிக்கார்டோ வலெரோ. 77 வயதாகும் இவர் உடல் நலப் பிரச்னைகளுக்காக பதவி விலகியுள்ளதாக மெக்சிகோவின் வெளியுறவு துறை அறிவித்துள்ளது.

ஆனால்  உண்மையில் பிக்கார்டோ வலெரோ விமானநிலையத்தில் இருந் அக்கடை ஒன்றில் சட்டையை திருடியதாகத் தெரிகிறது. ஏற்கனவே பியூனஸ் ஏர்ஸ் விமான நிலையத்தில் உள்ள கடையில் புத்தகம் ஒன்றை பிக்கார்டோ வலெரோ திருடியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போதும் அவர் சட்டை திருடியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதன் காரணமாகவே பிக்கார்டோ வலெரோ பதவி விலகியுள்ளார்  என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 2013ம் ஆண்டு அவருக்கு மூளையில் கட்டி வந்து பாதிப்பு ஏற்பட்ட பிறகு அவரது நடவடிக்கைகளை மருத்துவர்கள் கண்காணித்து  வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.