×

கொரோனா வைரஸ்: உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 1868-ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் இதுவரை 1868 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெய்ஜிங்: கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் இதுவரை 1868 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 1868 பேர்
 

கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் இதுவரை 1868 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் இதுவரை 1868 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 1868 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 98  பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்பத்தியுள்ள ஹூபேய் மாகாணத்திற்கு கூடுதலாக 25 ஆயிரத்து 633 டாக்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களில் 20 ஆயிரத்து 374 டாக்டர்கள் கொரோனாவால் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள வுகான் நகருக்கு சென்றுள்ளனர். இதனால் டாக்டர்களின் பணிச்சுமை குறைவது மட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு விரைவில் சிகிச்சை அளிக்க முடியும். அதன் காரணமாக இந்த வைரஸ் வேகமாக பரவுவதை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று கருதப்படுகிறது.