×

கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 30% அதிகரிப்பு – இத்தாலியில் பார்கள், உணவகங்கள், கடைகள் மூடப்பட்டது

இத்தாலியில் கொரோனா வைரஸால் இறப்பவர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்ததால் அங்கு பார், உணவகம், கடைகள் மூடப்பட்டன. ரோம்: இத்தாலியில் கொரோனா வைரஸால் இறப்பவர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்ததால் அங்கு பார், உணவகம், கடைகள் மூடப்பட்டன. உலகளவில் கொரோனா வைரஸால் ஒரேநாளில் 337 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 4637-க்கும் மேற்பட்டோர் உலகளவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரம்
 

இத்தாலியில் கொரோனா வைரஸால் இறப்பவர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்ததால் அங்கு பார், உணவகம், கடைகள் மூடப்பட்டன.

ரோம்: இத்தாலியில் கொரோனா வைரஸால் இறப்பவர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்ததால் அங்கு பார், உணவகம், கடைகள் மூடப்பட்டன.

உலகளவில் கொரோனா வைரஸால் ஒரேநாளில் 337 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 4637-க்கும் மேற்பட்டோர் உலகளவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரம் கடந்துள்ளது. அத்துடன் இதுவரை உலகில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், இத்தாலியில் கொரோனா வைரஸால் இறப்பவர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டில் பார்கள், உணவகம், கடைகள் மூடப்பட்டன. கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் 800-க்கும் அதிகமாகமானோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.