×

காந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி

தூய்மை இந்தியா எனும் காந்தியின் கனவை நிறைவேற்ற கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தூய்மை இந்தியா எனும் காந்தியின் கனவை நிறைவேற்ற கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று நள்ளிரவுக்குப் பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா புறப்படுகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் செப்டம்பர் 27-ல் மோடி உரையாற்றுகிறார்.
 

தூய்மை இந்தியா எனும் காந்தியின் கனவை நிறைவேற்ற கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

தூய்மை இந்தியா எனும் காந்தியின் கனவை நிறைவேற்ற கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி இன்று நள்ளிரவுக்குப் பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா புறப்படுகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் செப்டம்பர் 27-ல் மோடி உரையாற்றுகிறார். பிரதமர் மோடி இன்று நள்ளிரவு புறப்பட்டு நாளை பிற்பகல் அமெரிக்கா சென்றடைய உள்ளார். முதல் கட்டமாக ஹூஸ்டன் நகரை சென்றடைகிறார். அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து மோடி ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில் வெளிநாடு பயணம் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “ஐநாவில் இந்தியா நடத்தும் காந்தியின் பிறந்தநாள் விழா அவரது எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். பல நாட்டு தலைவர்களுடன் உரையாடுவதற்கான நல்வாய்ப்பாக அமெரிக்க சுற்றுப்பயணம் அமையும். குளோபல் கோல்கீப்பர் என்ற விருது வழங்கும் பில்கேட்சின் அமைப்புக்கு நன்றி. தூய்மை இந்தியா எனும் காந்தியின் கனவை நிறைவேற்ற கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.