×

கள்ளக்காதலனை மீட்க, கொலை செய்ய திட்டமிட்ட கேரள பெண் | அமெரிக்காவில் கைது 

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் டினா ஜோன்ஸ்(32) என்கிற பெண்மணி. அமெரிக்காவில், சிகாகோ பகுதியில் வசித்து வருகிறார். லயோலா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் பணிபுரிந்து வந்த டினாவிற்கு, அதே மருத்துவமனையில் வேலைப் பார்த்து வந்த திருமணமான ஒரு மருத்துவரின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தங்களது கள்ளக்காதலைத் தொடர்ந்துள்ளனர். இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் டினா ஜோன்ஸ்(32) என்கிற பெண்மணி. அமெரிக்காவில், சிகாகோ பகுதியில் வசித்து வருகிறார். லயோலா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் பணிபுரிந்து வந்த
 
இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் டினா ஜோன்ஸ்(32) என்கிற பெண்மணி. அமெரிக்காவில், சிகாகோ பகுதியில் வசித்து வருகிறார். லயோலா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் பணிபுரிந்து வந்த டினாவிற்கு, அதே மருத்துவமனையில் வேலைப் பார்த்து வந்த திருமணமான ஒரு மருத்துவரின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தங்களது கள்ளக்காதலைத் தொடர்ந்துள்ளனர். 

இந்நிலையில், சிறிது காலத்திற்கு பிறகு அந்த மருத்துவர் டினாவை பிரிந்து சென்றுள்ளார். தனது காதலன், தன்னிடமிருந்து பிரிந்து சென்றது குறித்து வருத்தமடைந்த டினா, அந்த மருத்துவரின் மனைவியை கொலை செய்து விட்டால், வேறு வழியில்லாமல் தனது காதல் பாதை மீண்டும் சரியாகிவிடும் என்று விபரீத திட்டத்தில் இறங்கியிருக்கிறார்.

இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இணையதளத்தில் ஒரு அடியாளை தேர்ந்தெடுத்து, கொலை செய்வதற்கு 12,000 டாலர்களையும் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை மருத்துவருக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். விசாரணையில் இதனைக் கண்டறிந்த போலீசார், டினாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையில், கொலைக்கு முயன்றதாக டினா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து வழக்கை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.