×

கலிபோர்னியா காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 25-ஆக உயர்வு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேம்ப் பயரால் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது. கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேம்ப் பயரால் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் வட பகுதியில் சாக்ரமண்டோ நகருக்கு வடக்கே கடந்த 8-ம் தேதி முதல் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. 50 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் சில மணி நேரத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்துவிட்டது. இதற்கு காரணம்
 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேம்ப் பயரால் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேம்ப் பயரால் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் வட பகுதியில் சாக்ரமண்டோ நகருக்கு வடக்கே கடந்த  8-ம் தேதி முதல் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. 50 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் சில மணி நேரத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்துவிட்டது. இதற்கு காரணம் கேம்ப் பயர்தான் என கூறப்படுகிறது

இந்த தீயில் சிக்கி 6 ஆயிரத்து 700க்கும் மேலான வீடுகள், வணிக நிறுவனங்கள் எரிந்து உருக்குலைந்து போய்விட்டன. அந்த பகுதியில் வசித்த 24,000 மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு போய் விட்டனர். ஆனால் 9 பேர் பரிதாபமாக பலியாகினர் என முதற்கட்ட தகவல்க: வெளியானது. அவர்களில் 5 பேர் தங்கள் கார்களின் அருகிலும், 3 பேர் வீடுகளுக்கு வெளியேயும், ஒருவர் வீட்டுக்குள்ளும் சடலமாக கிடந்தனர் என கூறப்பட்டது.

இந்நிலையில், தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது. இது மேற்கொண்டு உயரக்கூடும் என தெரிகிறது. காணாமல் போன 35 பேரை தேடும் பணியும் நடந்து வருகிறது. அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிப்பதால் மீட்பு பணியிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கலிபோர்னியா வரலாற்றில் மிக பெரிய அழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ இதுதான் எனவும் கூறப்படுகிறது.