×

கனடா மாடலுக்கு பாலியல் சீண்டல்; இருவர் கைது!

என்னை தனியாக விடுங்கள், இங்கிருந்து போய் விடுங்கள் என கலூட்டா கூறிய போது, அவரை பார்த்து சிரித்ததுடன், அவர் புக் செய்திருந்த காரில் ஏற விடாமல் வழிமறித்துள்ளனர் இஸ்லாமாபாத்: கனடா நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு பாலியல் சீண்டல் அளித்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். கனடா நாட்டை சேர்ந்த மாடல் அழகியும், சமூக ஆர்வலருமான அஸ்மா கலுட்டா, பாகிஸ்தானில் உள்ள பஹிரா நகர் பகுதியில் நின்று கொண்டிருந்த போது, அங்கு
 

என்னை தனியாக விடுங்கள், இங்கிருந்து போய் விடுங்கள் என கலூட்டா கூறிய போது, அவரை பார்த்து சிரித்ததுடன், அவர் புக் செய்திருந்த காரில் ஏற விடாமல் வழிமறித்துள்ளனர்

இஸ்லாமாபாத்: கனடா நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு பாலியல் சீண்டல் அளித்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.

கனடா நாட்டை சேர்ந்த மாடல் அழகியும், சமூக ஆர்வலருமான அஸ்மா கலுட்டா, பாகிஸ்தானில் உள்ள பஹிரா நகர் பகுதியில் நின்று கொண்டிருந்த போது, அங்கு காரில் வந்த இருவர், அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதுடன், தங்களது காரில் ஏறுமாறும் கூறியுள்ளனர்.

என்னை தனியாக விடுங்கள், இங்கிருந்து போய் விடுங்கள் என கலூட்டா கூறிய போது, அவரை பார்த்து சிரித்ததுடன், அவர் புக் செய்திருந்த காரில் ஏற விடாமல் வழிமறித்துள்ளனர். தொடர்ந்து, அந்த காரின் பின்னாலேயே வந்ததுடன், கார் ஓட்டுநரிடம், அவரை இறக்கி விடும் இடம் குறித்தும் கேட்டுள்ளனர்.

இது தொடர்பான காட்சிகளை கலூட்டா எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன், அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஹம்ஸா சோஹைல் மற்றும் அனாஸ் கம்ரான் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அவர், பாதிக்கப்ப பெண்களை விமர்சிப்பவர்களை சாடியுள்ளார். அதில், என்னுடைய புகார் ஊடகங்களில் வந்திருக்கிறதா என்று பார்த்த போது, என்னுடைய ஆடை, தோற்றம் உள்ளிட்டவைகள் குறித்து பலரும் என்னை விமர்சித்துக் கொண்டிருந்தனர்.

பாலியல் சீண்டலால் பதிக்கப்பட்ட பெண்களை விமர்சிக்காமல், பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆண்கள் கைது செய்யப்படுவது உள்ளிட்டவைகள் குறித்து உண்மை நிலவரத்தை பற்றி நாம் பேச வேண்டும். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரை நான் திருமணம் செய்து கொண்டுள்ளேன். நான் இங்கு வாழ்கிறேன் இது என்னுடைய வீடு. நான் இங்கேயே நீண்ட நாட்கள் வாழ்ந்தால், என்னுடைய குழந்தைகளும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பார்கள், இது அவர்களுக்கும் வீடாக இருக்கும். எனவே, எனக்கும், என்னுடைய சகோதரிகளுக்கும் இந்நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நான் விரும்புவதை போல, என்னுடைய குழந்தைகளுக்கும் இந்நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையும் வாசிங்க

மும்பை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; புகார் அளிக்க அலைக்கழித்த போலீசார்!