×

கஞ்சா புகைக்க மாதம் ரூ. 2.15 லட்சம் சம்பளம்: ஆனா ஒரேயொரு கண்டிஷன்!

ஆட்களை பணிக்கு வேலைக்கு அமர்த்த அந்த நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்துள்ளது. கஞ்சா புகைக்க 2.15 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா? ஆம் ‘American Marijuana’ என்னும் கஞ்சா மருத்துவ ஆன்லைன் இதழ் ஒன்று கஞ்சா செடியின் மருத்துவ பயன்பாடு குறித்து ஆய்வு செய்து செய்தி வெளியிட்டு வருகிறது. இதற்காக கஞ்சாவை சுவைக்க ஆட்களை பணிக்கு வேலைக்கு அமர்த்த அந்த நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்துள்ளது. தேர்வாகும் நபர்கள் வெவ்வேறு கஞ்சா ரகங்களை
 

ஆட்களை  பணிக்கு வேலைக்கு அமர்த்த அந்த நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்துள்ளது.

கஞ்சா புகைக்க  2.15 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள்  என்றால் நம்பமுடிகிறதா? ஆம் ‘American Marijuana’ என்னும் கஞ்சா மருத்துவ ஆன்லைன் இதழ் ஒன்று கஞ்சா செடியின் மருத்துவ பயன்பாடு குறித்து ஆய்வு செய்து செய்தி வெளியிட்டு வருகிறது. இதற்காக கஞ்சாவை சுவைக்க ஆட்களை  பணிக்கு வேலைக்கு அமர்த்த அந்த நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்துள்ளது.

தேர்வாகும் நபர்கள் வெவ்வேறு கஞ்சா ரகங்களை சுவைத்து  அதுகுறித்து விமர்சனத்தைத் தெரிவிக்க வேண்டும். ஆனால்  ஒரு நிபந்தனை உண்டு.  பணிக்கு சேர விரும்பும் நபர் தனக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா சட்டப்பூர்வ அனுமதியுடன் விளைவிக்க வேண்டும். ஒருவேளை உங்கள் நாட்டில் அதற்கான அனுமதி இல்லையென்றால் நீங்கள் வேலைக்கு  சேர முடியாது.

அத்துடன்  18 வயது பூர்த்தியானவர்கள், நான்  ஏன்  இந்த வேலைக்கு தகுதியானவன் என்று ஒருநிமிட பேசி வீடியோவை அனுப்பிவைக்கவேண்டும். இதுவரை இந்த வேலைக்கு  3 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்  என்று  ஆன்லைன் இதழின் முதன்மை ஆசிரியர் ட்வைட் ப்ளேக் கூறியுள்ளார்.