×

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா ..ஆயிரக் கணக்கான மக்கள் சிறப்புப் பிரார்த்தனை!

தமிழகத்தில் இருந்து 74 விசைப்படகுகள் மற்றும் 24 நாட்டுப் படகுகளில் 3,004 பேர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் இலங்கைக்குச் சென்றனர். முந்தைய காலத்தில் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இந்திய அரசால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. அதனால் அங்கிருந்த புனித அந்தோணியார் கோவிலும் இலங்கைக்குச் சொந்தமானதாக மாறியது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று மாலை 6 மணிக்குக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைக் காணத் தமிழகத்தில்
 

தமிழகத்தில் இருந்து 74 விசைப்படகுகள் மற்றும் 24 நாட்டுப் படகுகளில்  3,004 பேர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் இலங்கைக்குச் சென்றனர். 

முந்தைய காலத்தில் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இந்திய அரசால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. அதனால் அங்கிருந்த புனித அந்தோணியார் கோவிலும் இலங்கைக்குச் சொந்தமானதாக மாறியது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று மாலை 6 மணிக்குக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைக் காணத் தமிழகத்தில் இருந்து 74 விசைப்படகுகள் மற்றும் 24 நாட்டுப் படகுகளில்  3,004 பேர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் இலங்கைக்குச் சென்றனர். 

நேற்று கொடியேற்றப்பட்ட பிறகு,  திருச்சிலுவை ஆராதனையும் சிலுவைப்பாதை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனை அங்குக் குவிந்திருந்த ஆயிரக் கணக்கான மக்கள் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதன் பிறகு, தேர் பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் அந்த திருவிழா இன்று  திருப்பலி பூஜையுடன் நிறைவடைகிறது.