×

ஒரு கோடியைக் கடந்தது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனா நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தொடங்கியது. அதன்பின் உலகம் முழுவதும் இந்நோய் பரவல் வேகமெடுத்தது. அதன் எண்ணிக்கை தற்போது ஒரு கோடியைக் கடந்துள்ளது. கொரோனா நோய்ப் பரவல் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை அளித்துவருகிறது. அமெரிக்காவில் இதன் தாக்கம் பெருமளவு உள்ளது. பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை நெருங்கி வருகிறது. இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் 13 லட்சத்தைக்
 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனா நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தொடங்கியது. அதன்பின் உலகம் முழுவதும் இந்நோய் பரவல் வேகமெடுத்தது. அதன் எண்ணிக்கை தற்போது ஒரு கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா நோய்ப் பரவல் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை அளித்துவருகிறது. அமெரிக்காவில் இதன் தாக்கம் பெருமளவு உள்ளது. பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை நெருங்கி வருகிறது. இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் 13 லட்சத்தைக் கடந்துவிட்டது. மூன்றாம் இடத்தில் உள்ள ரஷ்யாவில் 6 லட்சமும், நான்காம் இடத்தில் 5 லட்சமும் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை கடந்துவிட்டது.

உலகளவில் ஜூன் 27 அன்று பதிவான தகவலில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,00,53,848 பேர். இவர்களில் நோயிலிருந்து நலம் பெற்று வீடு திரும்பியவர்கள் 5,426,644 பேர். மரணித்தவர்கள் 5,00,183.

இந்திய அளவில் பார்க்கும் ஜூன் 27 அன்று பதிவான தகவலில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 529,577 பேர். இவர்களில் நோயிலிருந்து நலம் பெற்று வீடு திரும்பியவர்கள் 3,10,146 பேர். மரணித்தவர்கள் 16,103 பேர்.

Source: www.worldometers.info/coronavirus/