×

ஏறக்கட்டிக்கொண்டு போகும் 2019 ! சாதனைகள் என்ன? வேதனைகள் என்ன?

2020ம் ஆண்டு பிறக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் 2019ம் ஆண்டு நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம். 2020ம் ஆண்டு பிறக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் 2019ம் ஆண்டு நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம். ஜனவரி – சீனாவின் சாங்இ-4 என்ற விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியிலுள்ள ஐட்கென் படுகையில் தரையிறங்கியது. ஜனவரி 10 – வெனிசுவேலா தேசிய பேரவை குவான் குவைடோவை இடைக்கால தலைவராக அறிவித்ததோடு, அதிபர்
 

2020ம் ஆண்டு பிறக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் 2019ம் ஆண்டு நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்.

2020ம் ஆண்டு பிறக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் 2019ம் ஆண்டு நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்.

ஜனவரி – சீனாவின் சாங்இ-4 என்ற விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியிலுள்ள ஐட்கென் படுகையில் தரையிறங்கியது.

ஜனவரி 10 – வெனிசுவேலா தேசிய பேரவை குவான் குவைடோவை இடைக்கால தலைவராக அறிவித்ததோடு, அதிபர் நிக்கோலஸ் மதுரோவை பதவியில் இருந்து அகற்றப்பட்டார். 

ஜனவரி 28 – ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை ஹூவாவெய் நிறுவனமும், அதன் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ட்சொ-வும் மீறினார்கள் என்பதற்காக ஹுவாவெய் நிறுவன தலைமை அதிகாரி மெங் வான்ட்சொ-ஐ அமெரிக்கா கேட்டுகொண்டதன் பேரில் கனடா கைது செய்தது. 

பிப்ரவரி 3 – ஐக்கிய அமீரகம் சென்ற போப் பிரான்சிஸ் அரேபிய தீபகற்பத்திற்கு செல்லும் முதல் போப் என்ற பெருமை பெற்றார். 

பிப்ரவரி 27 – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் கிம் ஜாங்-உன் உடன் வியட்நாமில் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பில் வடகொரியாவின் கோரிக்கைகள் முழுவதையும் ஏற்றுகொள்ள முடியாது என்று கூறி டிரம்ப் வெளிநடப்பு செய்தார். இதனால் தோல்வியில் முடிந்தது.

மார்ச் 15: கிரைஸ்ட் சர்ச்சில் உள்ள மிகப் பெரிய மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். 

ஏப்ரல் 15: பாரிஸ் நகரில், தீ விபத்தால் ஏறக்குறைய 850 ஆண்டுகள் பழமையான நோட்ர-டாம் தேவாலயம் சேதமடைந்தது.

ஏப்ரல் 21. இலங்கையிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் 259 பேர் கொல்லப்பட்ட நிலையில், 500-க்கும் மேலானோர் காயமடைந்தனர்.

தாய்லாந்து அரசராக மகா வஜ்ரலாங்கோர்ன் மணிமுடி சூட்டப்பட்டார். பூமிபோன் அடூன்யடேட் 2016ம் ஆண்டு இறந்த பின்னர், 66 வயதாகும் அரசர் மகா வஜ்ராலங்கோர்ன் அரசமைப்பு சட்ட முடியாட்சியின் மன்னரானார்.

மே மாதம் 6ம் தேதி சிரியா உள்நாட்டு போரில் மிக முக்கிய தாக்குதல் நடத்தியுள்ளதாக குர்து இனத்தவர் தலைமையிலான அமெரிக்க ஆதரவு படை தெரிவித்தது.

மே மாதம் 12ம் தேதி அரம்கோ நிறுவனத்தின் இரண்டு எண்ணெய் கப்பல் உள்பட நான்கு கப்பல்கள் சேதமடைந்தன. 

 

ஜூன் 20ம் தேதி அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது.

செப்டம்பர் 14 சௌதி அரேபியா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர், செப்டம்பர் 21ம் தேதி, பல துருப்புக்களை வளைகுடாவுக்கு அனுப்பவும், ஆயுதங்களை விற்கவும் அமெரிக்க அதிபர் அனுமதி வழங்கினார்.

ஜூலை 14 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதல்முறையாக இங்கிலாந்து அணி வென்றது.

ஜூலை 7 பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா கோப்பையை தட்டிச்சென்றது.

ஜூன் 9  – சந்தேக நபர்களை பெருநிலப்பகுதி சீனாவிடம் ஒப்படைக்க வழிசெய்யும் மசோதாவுக்கு எதிராக ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்றது. 

பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றம் மறுத்துவிட்டதால், பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக ஜூன் 7ம் நாள் அறிவித்ததோடு, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் அவர் விலகினார்.

ஆகஸ்ட் 21: அமேசான் காட்டில் தீ பற்றி பெரும் பாதிப்புகளை உண்டாக்கியது. இந்த காட்டுத்தீ ‘சர்வதேச நெருக்கடி’ என்று விவாதிக்கப்படும் அளவுக்கு பெரிய அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.

செப்டம்பர் 24: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் தொடர்பான முறையான விசாரணைக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்ஸி பலோசி அறிவித்தார்.

ஈராக் நாட்டு மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகக் தொடர் போராட்டங்களை நடத்தினர். மிக அதிகமாக இருக்கும் வேலைவாய்ப்பின்மை, மோசமான பொதுச் சேவைகள், மற்றும் ஊழல். இதுதான் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடுவதற்கான முக்கிய காரணங்கள்.

சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேருக்கு சௌதி அரேபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை வழங்கியது.