×

உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7000-ஐ கடந்தது

உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7000-ஐ கடந்துள்ளது. பெய்ஜிங்: உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7000-ஐ கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா
 

உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7000-ஐ கடந்துள்ளது.

பெய்ஜிங்: உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7000- கடந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 7173-க்கும் மேற்பட்டோர் உலகளவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 82 ஆயிரம் கடந்துள்ளது. அதில் இதுவரை உலகில் 79 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.