×

உண்ணாவிரதம் இருந்த துருக்கி இசைக் கலைஞர் ஹெலின் போலெக் உயிரிழப்பு

அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் கடைபிடித்து வந்த துருக்கி இசைக் கலைஞர் ஹெலின் போலெக் உயிரிழந்தார். இஸ்தான்புல்: அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் கடைபிடித்து வந்த துருக்கி இசைக் கலைஞர் ஹெலின் போலெக் உயிரிழந்தார். பிரபலமான ‘யோரும்‘ இசைக்குழுவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், சிறைப்பிடிக்கப்பட்ட இசைக் கலைஞர்கள் 7 பேரை விடுவிக்க கோரியும் அந்த இசைக்குழுவின் உறுப்பினரான ஹெலின் போலெக், எர்டோகன் அரசை எதிர்த்து கடந்த 288 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். நீண்ட நாட்களாக உண்ணாவிரதம்
 

அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் கடைபிடித்து வந்த துருக்கி இசைக் கலைஞர் ஹெலின் போலெக் உயிரிழந்தார்.

இஸ்தான்புல்: அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் கடைபிடித்து வந்த துருக்கி இசைக் கலைஞர் ஹெலின் போலெக் உயிரிழந்தார்.

பிரபலமான யோரும்இசைக்குழுவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், சிறைப்பிடிக்கப்பட்ட இசைக் கலைஞர்கள் 7 பேரை விடுவிக்க கோரியும் அந்த இசைக்குழுவின் உறுப்பினரான ஹெலின் போலெக், எர்டோகன் அரசை எதிர்த்து கடந்த 288 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

நீண்ட நாட்களாக உண்ணாவிரதம் கடைபிடித்ததன் நீட்சியாக ஹெலின் போலெக்கிற்கு கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த நிலையில், 28 வயதான அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஹெலின் போலெக் உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்பு அழகாக, உடல்நலத்தோடு இருந்தார். ஆனால் கடுமையான உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல் நாளடைவில் எலும்பும் தோலுமாக காட்சியளித்தது. ஹெலின் போலெக் மரணம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.