×

உங்க நாடுகளிலே ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கு! விருதை புறக்கணித்த கிரேட்டா தன்பெர்க்!

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க், சுற்றுச்சூழல் மீதுள்ள தீரா காதலால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலக வெப்பமயமாதலுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குரல் கொடுத்தார். நாடாளுமன்ற வளாகத்தில் தனி ஒருத்தியாக ப் போராடிய இந்த சிறுமி மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க், சுற்றுச்சூழல் மீதுள்ள தீரா காதலால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலக வெப்பமயமாதலுக்கு விழிப்புணர்வு
 

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க், சுற்றுச்சூழல் மீதுள்ள தீரா காதலால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலக வெப்பமயமாதலுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குரல் கொடுத்தார். நாடாளுமன்ற வளாகத்தில் தனி ஒருத்தியாக ப்
போராடிய இந்த சிறுமி மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியது. 

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க், சுற்றுச்சூழல் மீதுள்ள தீரா காதலால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலக வெப்பமயமாதலுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குரல் கொடுத்தார். நாடாளுமன்ற வளாகத்தில் தனி ஒருத்தியாக
போராடிய இந்த சிறுமி மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியது. 

இதன் மூலம் பிரபலமான அவர் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்பட்டார். மேலும் பல்வேறு நாடுகளில் பருவநிலை மாற்றத்திற்கு அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி நடைபெறும் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதற்கு இவருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் கிரேட்டா தன்பெர்க்கை பின்பற்றிய மாணவர்கள் சிலர் பருவநிலை மாற்றங்களை தடுக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சிறுவயதிலேயே சுற்றுச்சூழல் ஆர்வலராக உருமாறிய தன்பெர்க்க்கு நோர்டிக் நாட்டைச் சேர்ந்த ஸ்டால்க்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் சூழலியலாளருக்கான விருது வழங்க திட்டமிட்டது. இந்த தகவலை ஸ்டால்க்ஹோம் பத்திரிக்கைகள் மூலம் வெளியிட்டது. இந்த விருதுடன் சேர்த்து, 37 லட்சம் பரிசுத் தொகையும் தன்பெர்க்க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விருதும், பணமும் தனக்கு தேவையில்லை என உதறி தள்ளிய கிரேட்டா,  சூழலியல் போராட்டங்களுக்கு விருது வேண்டாம், மக்களின் மனதில் ஏற்படும் மாற்றங்களே போதும் எனக் கூறினார். விருது கொடுக்கும் நோர்டிக் நாட்டிடமே பல சூழலியல் பிரச்னைகள் இருக்கு என சுட்டிக்காட்டிய கிரேட்டா,  முதலில் அதனை கவனியுங்கள் என தெரிவித்தார். கிரேட்டாவின் இந்த செயலை பலர் விமர்சித்து வருகின்றனர்.