×

“ஈரான் மீது நடவடிக்கை எடுங்க.. இல்லன்னா, இதுதான் நடக்கும்” சவுதி அரேபிய இளவரசர் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை..!

ஈரான் மீது உலக நாடுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், வரலாறு காணாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை உயரும் என சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் மீது உலக நாடுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், வரலாறு காணாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை உயரும் என சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி
 

ஈரான் மீது உலக நாடுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், வரலாறு காணாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை உயரும் என சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் மீது உலக நாடுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், வரலாறு காணாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை உயரும் என சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி துபாயில் உள்ள பிரபல எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் கிணறுகளில் மீது ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 5 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்கள் எரிந்து நாசமாகின. மேலும் சுத்திகரிப்பு ஆலையின் செயல்பாடு வெகுவாக பாதிக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் உற்பத்தியிலும் தடை ஏற்பட்டுள்ளது. 

இதன் எதிரொலியாக, சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 12% உயர்ந்து ஒரு பீப்பாயின் விலை 70 டாலர்களாக விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் என பொருளாதார வல்லுனர்கள் கணக்கிட்டுள்ளனர். 

இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருக்கின்றது என்று உரிய ஆதாரத்துடன் செயற்கைக்கோள் புகைப்படத்தையும் சவுதி அரேபிய அரசிடம் அமெரிக்க உளவுத்துறை அளித்திருந்தது. இதனையடுத்து நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கூறுகையில், “சவுதி அரேபியாவின் எண்ணெய் கிணறுகளில் ஆளில்லா விமானம் தாக்கப்பட்டதற்கு பின்னணியில் ஈரான் அரசு செயல்பட்டிருக்கிறது. இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என அவர்கள் யோசிக்கவில்லை. ஆதாரங்கள் கிடைத்த பிறகும் தாங்கள் செய்யவில்லை என ஈரான் அரசு தொடர்ந்து மறுத்து வருவது இருநாடுகளுக்கும் இடையே கடுமையான சூழலை ஏற்படுத்தும். 

தவறு செய்த ஈரான் நாட்டின் மீது உலக நாடுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் ராணுவம் சார்ந்த தீர்வை எதிர்பார்க்க வில்லை. மாறாக, அரசியல் மற்றும் வர்த்தகம் சார்ந்த தீர்வை எதிர்பார்க்கிறோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தப்படும். உலக நாடுகள் பொருளாதாரத்தில் ஸ்தம்பித்து விடும் என்பதை நினைவில் கொண்டு செயல்படவேண்டும்” என எச்சரிக்கை விடுத்தார்.