×

இலங்கையில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த மூவர் கைது: 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு!

இலங்கையின் தலைநகர் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஹவேலியாவில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு: இலங்கையின் தலைநகர் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஹவேலியாவில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பல்வேறு இடங்களில் கடந்த ஞாயிற்று கிழமை ஈஸ்டர் தினத்தன்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தலைநகர் கொழும்புவில் உள்ள, ஷாங்கரி லா நட்சத்திர விடுதி, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி மற்றும்
 

இலங்கையின் தலைநகர்  கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்  ஹவேலியாவில்   200 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு: இலங்கையின் தலைநகர்  கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்  ஹவேலியாவில்   200 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு இடங்களில் கடந்த ஞாயிற்று கிழமை ஈஸ்டர் தினத்தன்று  அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தலைநகர் கொழும்புவில் உள்ள, ஷாங்கரி லா நட்சத்திர விடுதி, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி மற்றும் சின்னமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும்  வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதலில் 359 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியது 9 பேர் எனவும், அதில் ஒருவர் பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதற்காக அரசு மன்னிப்பு கோரியது.

இந்நிலையில் இலங்கையின் நுவரெலியா நகரில் ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் தலைநகர் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களிடமிருந்து  21 கையெறி குண்டுகள், 6 வாள்கள் பறிமுதல் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் 61 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கூடுதலாக 3 பேர் ஆயுதங்களுடன் பிடிபட்டுள்ளனர்

முன்னதாக இன்று காலை இலங்கை தலைநகர் கொழும்பு அருகே புகோடா நகரில் மீண்டும் குண்டுவெடிப்பு  சம்பவம் அரங்கேறியது. புகோடா நகரில்  உள்ள நீதிமன்ற வளாகம் அருகே நிகழ்ந்த இந்த சம்பவத்தில்  எந்தவித உயிர்பலியும்  ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: பதட்டம் அடங்குவதற்குள் இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: கலக்கத்தில் மக்கள்!