×

இலங்கைக்கு 10 டன் மருந்து பொருட்களை அனுப்பி வைத்தது இந்திய அரசு

சுமார் 10 டன் மருந்து பொருட்களை இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. கொழும்பு: சுமார் 10 டன் மருந்து பொருட்களை இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இலங்கை நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6-ஆக உள்ளது. இதுவரை கொரோனாவால் 186 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். இந்நிலையில், இலங்கை நாட்டுக்கு இந்திய அரசு 10 டன் மருத்துவப் பொருட்களை ஏர் இந்தியா சிறப்பு விமானம்
 

சுமார் 10 டன் மருந்து பொருட்களை இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

கொழும்பு: சுமார் 10 டன் மருந்து பொருட்களை இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இலங்கை நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6-ஆக உள்ளது. இதுவரை கொரோனாவால் 186 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். இந்நிலையில், இலங்கை நாட்டுக்கு இந்திய அரசு 10 டன் மருத்துவப் பொருட்களை ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் அனுப்பி வைத்தது.

முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் நாட்டுக்கு உதவி செய்யுமாறு இலங்கை அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து இந்த மருந்து பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் இந்த உதவிக்காக பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.