×

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தற்கொலை தாக்குதல் நடத்தியவரின் மனைவிக்கு குழந்தை பிறந்தது!?

இலங்கை தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. கொழும்பு: இலங்கை தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இலங்கையின் பல்வேறு இடங்களில் ஈஸ்டர் தினத்தன்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தலைநகர் கொழும்புவில் உள்ள, ஷாங்கரி லா நட்சத்திர விடுதி, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி மற்றும் சின்னமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதலில் 359 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 

இலங்கை தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. 

கொழும்பு: இலங்கை தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. 

இலங்கையின் பல்வேறு இடங்களில் ஈஸ்டர் தினத்தன்று  அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தலைநகர் கொழும்புவில் உள்ள, ஷாங்கரி லா நட்சத்திர விடுதி, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி மற்றும் சின்னமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும்  வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதலில் 359 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனிடையே உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதற்காக அரசு மன்னிப்பு கோரியது.

இலங்கையில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியது 9 பேர் எனவும், அதில் ஒருவர் பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒருவர் 22 வயது சட்டப்படிப்பு படித்த அலாவுதின் அகமது.  ஒரு வருடத்திற்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த  தற்கொலை தாக்குதலில் அலாவுதின் ஈடுபட்டபோது அவனது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். 

இந்நிலையில் குண்டுவெடிப்பு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின்போது அலாவுதினின் தந்தை  அகமது லபே, ‘ அலாவுதினின் மனைவிக்கு கடந்த 5ஆம் தேதியன்று குழந்தை பிறந்ததாகக்  கூறியுள்ளார். மேலும் ‘ என்னை யாரும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம். இனிமேல் நான் வரப்போவதில்லை. என் பெற்றோரையும், குடும்பத்தையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். எனக்காக இறைவனை பிரார்த்தியுங்கள்’ என்று அலாவுதின் அகமது  கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும், அது அவரின் இறப்பிற்கு பிறகே கிடைத்ததாகவும்  கூறப்பட்டுள்ளது.