×

இலங்கை தேவாலயங்களில் படுபயங்கர குண்டு வெடிப்பு… 52 பேர் உடல் சிதறி கொடூர மரணம்..!

இலங்கையில் உள்ள தேவாலயங்களில் 6 இடங்களில் நடைபெற்ற குண்டு விடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்டனர். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு கொச்சிடை அந்தோணியார், கட்டான கட்டுவப்பட்டி தேவாலயங்களில் நள்ளிரவில் நடத்தப்பட்ட சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புனிதவெள்ளியை தொடர்ந்து கல்லறையில் இருந்து இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் கிறித்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில் தேவாலயங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடைபெற்றது. சிறப்பு பிரார்த்தனையில்,
 

இலங்கையில் உள்ள தேவாலயங்களில் 6 இடங்களில் நடைபெற்ற குண்டு விடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்டனர். 

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு கொச்சிடை அந்தோணியார், கட்டான கட்டுவப்பட்டி தேவாலயங்களில் நள்ளிரவில் நடத்தப்பட்ட சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புனிதவெள்ளியை தொடர்ந்து கல்லறையில் இருந்து இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் கிறித்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில் தேவாலயங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடைபெற்றது. சிறப்பு பிரார்த்தனையில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
 
அப்போது, பட்டாசுகள் வெடித்து ஈஸ்டர் பண்டிகை ஆரவாரத்துடன் கொண்டாடினர்.  அப்போது திடீரென குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

இதில் 52 பேர் சம்பவ இடத்தியேலே பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு 6 இடங்களில் நடைபெற்றதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தக் கோர சம்பவம் குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தி வருகிறது.