×

இலங்கை குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்த கோடீஸ்வரர்

46 வயதாகும் ஆண்டர்ஸ் கோல்ச் போவ்ல்சன், லண்டன் மற்றும் ஸ்காட்லாந்தில் மிகப்பெரிய தொழிலதிபராக அறியப்படுபவர். அவரது 4 குழந்தைகளும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட இலங்கை வந்திருக்கின்றனர். ஆண்டர்ஸின் மகள், மற்ற மூவரும் கடற்கரையில் அமர்ந்திருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பில் தன் 3 குழந்தைகளையும் இழந்துவிட்டார் அசோஸ் நிறுவனர் ஆண்டர்ஸ் கோல்ச் போவ்ல்சன். ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 290-க்கும்
 

46 வயதாகும் ஆண்டர்ஸ் கோல்ச் போவ்ல்சன், லண்டன் மற்றும் ஸ்காட்லாந்தில் மிகப்பெரிய தொழிலதிபராக அறியப்படுபவர். அவரது 4 குழந்தைகளும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட இலங்கை வந்திருக்கின்றனர். ஆண்டர்ஸின் மகள், மற்ற மூவரும் கடற்கரையில் அமர்ந்திருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பில் தன் 3 குழந்தைகளையும் இழந்துவிட்டார் அசோஸ் நிறுவனர் ஆண்டர்ஸ் கோல்ச் போவ்ல்சன்.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 290-க்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்தனர். 500 நபர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பில் அசோஸ் நிறுவனர் ஆண்டர்ஸ் கோல்ச் போவ்ல்சன் தனது 3 குழந்தைகளையும் பறிகொடுத்தது தெரிய வந்துள்ளது.

46 வயதாகும் ஆண்டர்ஸ் கோல்ச் போவ்ல்சன், லண்டன் மற்றும் ஸ்காட்லாந்தில் மிகப்பெரிய தொழிலதிபராக அறியப்படுபவர். அவரது 4 குழந்தைகளும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட இலங்கை வந்திருக்கின்றனர். ஆண்டர்ஸின் மகள், மற்ற மூவரும் கடற்கரையில் அமர்ந்திருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார்.

ஆண்டர்ஸின் செய்தி தொடர்பாளர் அளித்துள்ள தகவலின்படி, 3 குழந்தைகள் இந்த குண்டுவெடிப்பில் உயிர் இழந்துள்ளனர். உடல்கள் சிதைந்ததால் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

4.5 பில்லியன் யூரோக்கள் சொத்து மதிப்புள்ள ஆண்டர்ஸ், ஸ்காட்லாந்தில் உள்ள மிகப்பெரிய செல்வந்தர். Asos.com மற்றும் Zalando ஆகிய நிறுவனங்களில் பெரும் பங்கு வகிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.